என் மலர்tooltip icon

    செய்திகள்

    அத்வானிக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி
    X
    அத்வானிக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி

    அத்வானி பிறந்தநாள்- நேரில் சென்று வாழ்த்திய பிரதமர் மோடி

    பாஜக மூத்த தலைவர் அத்வானியின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது வீட்டுக்கு சென்று பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.
    புதுடெல்லி:

    பாஜக மூத்த தலைவர் அத்வானி இன்று தனது 93-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    பிரதமர் மோடி அத்வானிக்கு வாழ்த்து தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அத்வானி நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு பிரார்த்தனை செய்வதாக மோடி கூறி உள்ளார்.  மேலும் கோடிக்கணக்கான பாஜக தொண்டர்கள் மட்டுமின்றி நாட்டு மக்களுக்கும் அத்வானி வாழும் உத்வேகமாக இருப்பதாகவும் புகழாரம் சூட்டி உள்ளார்.

    அத்துடன் இன்று காலை டெல்லியில் உள்ள அத்வானியின் வீட்டுக்கு பிரதமர் மோடி சென்றார். அப்போது அத்வானி வாசலுக்கு வந்து பிரதமரை வரவேற்று அழைத்துச் சென்றார். அத்வானிக்கு பிரதமர் மோடி மலர்க்கொத்து கொடுத்து பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தார். உள்துறை மந்திரி அமித் ஷா, பாஜக தலைவர் ஜே.பி. நட்டா ஆகியோரும் உடனிருந்தனர். அவர்களும் அத்வானிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். 

    அதன்பின்னர் அத்வானியுடன் பிரதமர் மோடி,  அமித் ஷா, ஜே.பி. நட்டா ஆகியோர் சிறிது நேரம் உரையாடினர். 
    Next Story
    ×