என் மலர்

  செய்திகள்

  அத்வானியுடன் பிரதமர் மோடி
  X
  அத்வானியுடன் பிரதமர் மோடி

  அவர் வாழும் உத்வேகம் -பிறந்தநாளில் அத்வானிக்கு புகழாரம் சூட்டிய பிரதமர் மோடி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பாஜக மூத்த தலைவர் அத்வானியின் பிறந்தநாளையொட்டி அவருக்கு பிரதமர் மோடி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
  புதுடெல்லி:

  பாஜக மூத்த தலைவர் அத்வானி இன்று தனது 93-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்துவருகின்றனர். 

  பிரதமர் மோடி அத்வானிக்கு வாழ்த்து தெரிவித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அத்வானி நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ்வதற்கு பிரார்த்தனை செய்வதாக மோடி கூறி உள்ளார். 

  ‘அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான அரசாங்கத்தில் உள்துறை மந்திரியும் துணை பிரதமராக இருந்த அத்வானி, நாட்டின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கினார். மேலும் கட்சியை மக்களிடம் கொண்டு சென்றார். கோடிக்கணக்கான பாஜக தொண்டர்கள் மட்டுமின்றி நாட்டு மக்களுக்கும் அத்வானி வாழும் உத்வேகமாக இருக்கிறார். அவர் நீண்ட காலம் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என பிரார்த்தனை செய்கிறேன்’ என மோடி கூறி உள்ளார்.

  இதேபோல் மத்திய மந்திரிகள் அமித் ஷா, பிரகாஷ் ஜவடேகர் மற்றும் பாஜக தலைவர்கள், தொண்டர்கள் என பல்வேறு தரப்பினரும் அத்வானிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். 
  Next Story
  ×