என் மலர்

  செய்திகள்

  ராகேஷ்குமார்சிங் பதாரியா
  X
  ராகேஷ்குமார்சிங் பதாரியா

  எத்தகைய அச்சுறுத்தல்களையும் சந்திக்க தயாராக இருக்க வேண்டும் - விமான படை தளபதி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  எத்தகைய அச்சுறுத்தல்கள் வந்தாலும் சந்திக்க தயாராக இருக்க வேண்டும் என்று ஆயுதப்படை வீரர்களுக்கு விமான படை தளபதி ராகேஷ்குமார்சிங் பதாரியா அறிவுறுத்தினார்.
  புனே:

  மராட்டிய மாநிலம், புனேயில் உள்ள தேசிய ராணுவ அகாடமியில் பயிற்சி முடித்த 217 வீரர்களுக்கு டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் அறிவியல், கணினி அறிவியல், கலை பட்டங்களை நேற்று முன்தினம் நடந்த விழாவில் வழங்கியது,.

  அதன் தொடர்ச்சியாக நேற்று அந்த வீரர்களை வழியனுப்பி வைக்கும் விழா நடைபெற்றது. இதையொட்டி அவர்கள் எழுச்சிமிகு அணிவகுப்பு நடத்தினார்கள்.

  இந்த அணிவகுப்பை விமான படை தளபதி ராகேஷ்குமார்சிங் பதாரியா பார்வையிட்டு ஏற்றுக்கொண்டார். அதையடுத்து அவர்கள் மத்தியில் அவர் பேசினார்.

  அப்போது அவர் கூறியதாவது:-

  தேசிய ராணுவ அகாடமி என்பது தலைமைத்துவத்துக்கான தொட்டில் மட்டுமல்ல; அது கூட்டுத்திறனின் உண்மையான தொட்டில் ஆகும்.

  தேசிய ராணுவ அகாடமியில் கூட்டு பயிற்சியின் மூலம் பெறுகிற பரந்த அனுபவத்தை ஒவ்வொருவரும் சம்மந்தப்பட்ட துறைகளில் எடுத்துச்செல்ல வேண்டும்.

  இன்றைய போர்க்களங்கள் மிகவும் சிக்கலானவை. கணிக்க முடியாத பாதுகாப்பு நடப்புகளுடன், பல பரிமாணங்களை கொண்டிருக்கின்றன.

  போர்க்களத்தில் பதிலடி கொடுக்கிற செயல்பாட்டு பதில் அளிப்பு மற்றும் தேவைகள், அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒருங்கிணைந்த அணுகுமுறையாக இருக்கும்.

  எனவே இங்கே நீங்கள் உங்கள் அணி தோழர்களுடன், பயிற்சி தோழர்களுடன் உருவாக்கிக்கொண்டுள்ள நட்பு பிணைப்புகள், உங்கள் வாழ்நாளெல்லாம் தொடர வேண்டும்.

  ஏனென்றால் உங்கள் பணி வாழ்வின் ஒவ்வொரு கட்டத்தில் செல்லும்போது, எப்போதும் சிறந்த ஒத்துழைப்பாக அதை மாற்றிக்கொள்ள வேண்டும்.

  முப்படைகளின் தலைமைத்தளபதியை நியமித்ததும், ராணுவ விவகாரங்கள் துறையை உருவாக்கியதும், நமது நாட்டின் உயர்ந்த வரலாற்று சீர்திருத்தங்களின் தொடக்கத்தை குறிக்கிறது.

  வளரும் ராணுவ வல்லுனர்களாக, நீங்கள் உலகைச்சுற்றிலும் உள்ள புவிசார் அரசியல் சிக்கல்கள், நம் சுற்றுப்புறத்தின் பாதுகாப்பு சூழலில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை புரிந்து கொள்ள தொடங்க வேண்டும்.

  நமது ஆயுதப்படைகள், பல முனைகளில் இருந்தும் வருகிற எத்தகைய அச்சுறுத்தல்களையும் சந்திக்க தயாராக இருக்க வேண்டும். இது எல்லா நேரங்களிலும் மிக பரந்த அறிவு, அர்ப்பணிப்பு, உறுதிப்பாடு, தியாகம் மற்றும் தலைமை ஆகியவற்றை கட்டாயமாக்குகிறது.

  ஒவ்வொரு சேவையும், இந்த தேசமும் உங்களிடம் இருந்து இதைத்தான் எதிர்பார்க்கின்றன.

  இவ்வாறு அவர் கூறினார்.
  Next Story
  ×