என் மலர்

  செய்திகள்

  பெண்ணை மீட்ட அதிகாரிகள்
  X
  பெண்ணை மீட்ட அதிகாரிகள்

  டாய்லெட்டில் மனைவியை ஒரு வருடமாக அடைத்து வைத்த கணவன்... போலீஸ் விசாரணை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அரியானா மாநிலத்தில் மனைவியை டாய்லெட்டில் ஒரு வருடத்திற்கும் மேலாக அடைத்து வைத்திருந்த கணவன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
  பானிபட்:

  அரியானா மாநிலம் பானிபட் அருகே உள்ள ரிஷ்பூர் கிராமத்தில் ஒரு பெண்ணை அவரது கணவன் டாய்லெட்டில் அடைத்து வைத்திருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து பெண்கள் பாதுகாப்பு மற்றும் குழந்தை திருமண தடுப்பு பிரிவு அதிகாரிகள் அந்த கிராமத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். 

  அப்போது நரேஷ் என்பவர் தன் மனைவியை ஒரு வருடத்திற்கும் மேலாக டாய்லெட்டுக்குள் வைத்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அந்த பெண்ணை அதிகாரிகள் மீட்டனர். மிகவும் அலங்கோலமாக, அழுக்கு படிந்த நிலையில் இருந்த அந்தப் பெண்ணை குளிப்பாட்டி பின்னர் இதுபற்றி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  தன் மனைவி மனநிலை பாதிக்கப்பட்டிருப்பதாகவும், வெளியில் எங்கும் உட்கார மறுத்து டாய்லெட்டில் சென்று அமர்ந்திருந்ததாகவும் அவரது கணவர் தெரிவித்துள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் அவரது மனநிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும் கூறினார்.

  ஆனால், அந்த பெண்ணிடம் பேசிய வகையில் அவருக்கு மனநிலை பாதிப்பு இருப்பதாக தோன்றவில்லை என்கிறார் அவரை மீட்ட அதிகாரி ரஜினி குப்தா. 
  Next Story
  ×