என் மலர்

  செய்திகள்

  காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி (கோப்பு படம்)
  X
  காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி (கோப்பு படம்)

  பீகார் தேர்தல் - நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை வெளியிட்டது காங்கிரஸ்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பீகார் தேர்தல் களம் சூடுபிடிக்கத்தொடங்கியுள்ள நிலையில் தங்கள் கட்சியின் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.
  புதுடெல்லி:

  243 தொகுதிகளை கொண்ட பீகார் மாநிலத்தின் சட்டமன்றத்தேர்தல் மூன்று கட்டங்களாக நடைபெற உள்ளது. அக்டோபர் 28-ம் தேதி, நவம்பர் 3, நவம்பர் 7 ஆகிய மூன்று தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பதிவாகும் வாக்குகள் நவம்பர் 10-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

  இதற்கிடையில், இந்த தேர்தலில் நிதிஷ்குமார் தலைமையிலான ஆளும் ஐக்கிய ஜனதா தளம்- பா.ஜனதா கூட்டணிக்கு எதிராக லாலு பிரசாத் யாதவின் மகன் தேஜஸ்வி யாதவ் தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டுள்ளது.

  இந்த மெகா கூட்டணியில் தொகுதி மொத்தம் உள்ள 243 இடங்களில் தேஜஸ்வி யாதவின் ராஷ்டீரிய ஜனதா தளம் 144 தொகுதிகளில் போட்டியிடுகிறது. காங்கிரஸ் 70, இந்திய கம்யூனிஸ்ட் (எம்.எல்.) 19, இந்திய கம்யூனிஸ்ட் 6, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 4 இடங்களில் போட்டியிடுகின்றன.

  இதனை எதிர்கொள்ள ஆளும் நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி தனது கூட்டணியை உறுதிப்படுத்தும் வகையில் தொகுதி உடன்பாடு எட்டப்பட்டிருந்தது. 

  அதன்படி, மொத்தமுள்ள 243 இடங்களில் 122 தொகுதிகளில் ஐக்கிய ஜனதா தளத்திற்கு, 121 இடங்களில் பாஜகவுக்கும் ஒதுக்கப்பட்டது. நிதிஷ்குமார் தனக்குள்ள தொகுதிகளில் இருந்து ஜித்தன் ராம் மாஞ்சியின் இந்துஸ்தான் அவாமி மோர்ச்சா கட்சிக்கு இடம் ஒதுக்க வேண்டும்.

  முதல்கட்ட வாக்குப்பதிவுக்கு இன்னும் 18 நாட்களே உள்ளநிலையில் பீகார் தேர்தல் களம் சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியும் தங்கள் தேர்தல் பிரசார வியூகங்களை அமைத்து வருகின்றன. தேர்தலை பொறுத்தவரை நட்சத்திர பேச்சாளர்கள் மிகவும் முக்கிய பிரசார யூக்தியாக பயன்படுகின்றனர். 

  இந்நிலையில், பீகார் தேர்தலில் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ள நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை காங்கிரஸ் இன்று வெளியிட்டுள்ளது. 

  நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, மன்மோகன் சிங், குலாம் நபி ஆசாத், சச்சின் பைலட், அசோக் கேலாட், ரன்தீப் சிங் சுர்ஜிவாலா, அம்ரீந்தர் சிங் உள்பட காங்கிரஸ் கட்சி தலைவர்கள் 30 பேரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.
  Next Story
  ×