என் மலர்
செய்திகள்

தப்பி ஓடும் குற்றவாளி
உத்தர பிரதேசத்தில் கைவிலங்குடன் தப்பி ஓடிய குற்றவாளி -இணையத்தில் வைரலான வீடியோ
உத்தர பிரதேசத்தில் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்ட நபர், விசாரணைக்குப் பயந்து கைவிலங்குடன் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
லக்கிம்பூர் கேரி:
உத்தர பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டம், மிதவ்லி பகுதியில், சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக அளிக்கப்பட்ட புகாரில் ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. பின்னர் அவரை காவலில் வைத்து விசாரிப்பதற்காக 2 போலீஸ்காரர்கள் மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றனர். குற்றவாளியின் கையில் விலங்கு மாட்டப்பட்டிருந்தது.
வழியில் ஒரு பெட்ரோல் பங்க்கில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி பெட்ரோல் நிரப்பி உள்ளனர். அப்போது திடீரென அந்த குற்றவாளி கைவிலங்குடன் அங்கிருந்து தப்பி ஓடினான். ஒரு போலீஸ்காரர் பின்னால் துரத்திச் சென்றார். ஆனால், பிடிக்க முடியவில்லை.
#WATCH Lakhimpur Kheri: An accused, who was sent to Police custody after being booked under POCSO Act, flees from a petrol pump while the vehicle in which he was being taken to police station was being refuelled. (13.09.2020) pic.twitter.com/nyhiemlLey
— ANI UP (@ANINewsUP) September 14, 2020
இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. தப்பி ஓடிய குற்றவாளியை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
பெட்ரோல் பங்கில் இருந்து குற்றவாளி தப்பி ஓடும் காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. பணியில் அலட்சியமாக இருந்த போலீஸ்காரர்கள் குறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட உதவி கமிஷனர் தெரிவித்துள்ளார்.
Next Story