search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நிர்மலா சீதாராமன்
    X
    நிர்மலா சீதாராமன்

    வங்கி, ஏடிஎம்களில் பிராந்திய மொழி உபயோகம் நிறுத்தம் இல்லை - நிர்மலா சீதாராமன் தகவல்

    வங்கி, ஏடிஎம்களில் பிராந்திய மொழி உபயோகம் நிறுத்தம் இல்லை என்று மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
    புதுடெல்லி:

    வங்கிகளில் ஏடிஎம்களில் பிராந்திய மொழி உபயோகிப்பதை தடுத்து நிறுத்துமாறு எந்தவித உத்தரவும் பிறபிக்கப்படவில்லை என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

    இது குறித்து மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இணையதள பதிவில் கூறியிருப்பதாவது:-

    மத்திய அரசின் நிதி அமைச்சரகத்திலிருந்து வங்கிகளில் அல்லது ஏடிஎம்களில் பிராந்திய மொழி உபயோகிப்பதை தடுத்து நிறுத்துமாறு எந்த விதமான உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை. நாங்கள் பிராந்திய மொழிகளை பயன்படுத்துவதை ஊக்குவிக்கிறோம். எனவே அவ்வாறு பிறப்பிக்கும் எண்ணமோ/நோக்கமோ இல்லை. எங்கேனும் இடையூறு ஏற்பட்டால் தெரிவிக்கவும். தகவல் தெரிவிக்கப்பட்டஉடனே நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் குறிப்பிடுள்ளார்.

    Next Story
    ×