என் மலர்

  செய்திகள்

  பிஜூ ஜனதா தளம் எம்பி அனுபவ் மொகந்தி, மனைவி வர்ஷா பிரியதர்ஷினி
  X
  பிஜூ ஜனதா தளம் எம்பி அனுபவ் மொகந்தி, மனைவி வர்ஷா பிரியதர்ஷினி

  குடித்துவிட்டு என்னை அடிக்கிறார்... பிஜு ஜனதா தளம் எம்.பி. மீது மனைவி வழக்கு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஒடிசாவில் பிஜூ ஜனதா தளம் எம்பி அவரது மனைவியை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் டார்ச்சர் செய்வதாக அவரது மனைவி வழக்கு தொடர்ந்துள்ளார்.
  கட்டாக்:

  ஒடிசா மாநில எம்பியும் பிஜூ ஜனதா தளம் கட்சியின் மக்களவை துணை கொறடாவுமான அனுபவ் மொகந்தி மீது அவரது மனைவி வர்ஷா பிரியதர்ஷினி, கட்டாக் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். பெண்கள் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் அவர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

  என் கணவர் குடித்துவிட்டு வந்து என்னை அடித்து துன்புறுத்துகிறார். அவரது குடும்பத்தினர் என்னை மிகவும் அவமானப்படுத்துகின்றனர். என்னை ஒரு பூச்சியைப் போன்று மோசமாக நடத்துகின்றனர். 

  என் கணவர் ஒரு குடிகாரர் மட்டுமின்றி பெண்கள் சகவாசம் உள்ளவர். அவர் குடிபோதையில் மோசமான வார்த்தைகளால் திட்டுகிறார். 2019 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பிறகு, மொகந்தி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களின் சித்ரவதை நாளுக்கு நாள் சகித்துக்கொள்ள முடியாத அளவிற்கு அதிகரித்துள்ளது. 

  கடந்த ஜூன் 11 அன்று, என் கணவர் பரஸ்பர விவாகரத்துக்கு ஒப்புக் கொள்ளும்படி என்னிடம் கூறினார். நான் ஒப்புக் கொள்ளாவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் மிரட்டினார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  மொகந்தியிடம் இருந்து 15 கோடி ரூபாய் இழப்பீடு பெற்றுத்தர வேண்டும். மேலும் வீட்டு வாடகை மற்றும் பராமரிப்புக்காக மாதந்தோறும் ரூ .70,000 ஜீவனாம்சம் வழங்க உத்தரவிடவேண்டும். 

  இவ்வாறு அவர் தனது மனுவில் கூறியுள்ளார்.

  இந்த வழக்கு திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. 

  இதேபோல் இந்து திருமண சட்டத்தின்கீழ் கட்டாக் குடும்ப நல நீதிமன்றத்திலும் பிரியதர்ஷினி தனியாக ஒரு மனு தாக்கல் செய்துள்ளார்.

  ஒடிசா திரையுலகில் முன்னணி நடிகர்களாக இருந்த மொகந்தியும், பிரியதர்ஷினியும் 2014ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இருவரும் இணைந்து பல படங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
  Next Story
  ×