என் மலர்

  செய்திகள்

  நல்லாசிரியர் விருதுகளை வழங்கி உரையாற்றும் ஜனாதிபதி
  X
  நல்லாசிரியர் விருதுகளை வழங்கி உரையாற்றும் ஜனாதிபதி

  47 ஆசிரியர்களுக்கு தேசிய நல்லாசிரியர் விருது- காணொலி காட்சி வாயிலாக ஜனாதிபதி வழங்கினார்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்தியா முழுவதும் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட 47 ஆசிரியர்களுக்கு விருதுகளை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் காணொலி வாயிலாக வழங்கினார்.
  புதுடெல்லி:

  ஆசிரியர்களை கவுரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் ஆசிரியர் தினத்தன்று தேசிய நல்லாசிரியர் விருது மத்திய அரசால் வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த அணடு இந்தியா முழுவதிலும் 47 ஆசிரியர்கள் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு, அவர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டன. 

  இந்நிலையில், ஆசிரியர் தினமான இன்று நல்லாசிரியர் விருது அறிவிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு ஜனாதிபதி விருதுகளை வழங்கி கவுரவித்தார். டெல்லி ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற விழாவில் காணொலி வாயிலாக விருதுகளை வழங்கினார். விருது பெற்ற 47 ஆசிரியர்களில் 18 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

  தமிழகத்திலிருந்து சென்னை அசோக்நகர் மகளிர் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் ஆர்.சி.சரஸ்வதி, விழுப்புரம் மாவட்டம் சத்தியமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் எஸ்.திலீப் ஆகியோர் நல்லாசிரியர் விருது பெற்றனர். 
  Next Story
  ×