என் மலர்
செய்திகள்

மத்திய குற்றப்பிரிவு போலீஸ் அலுவலகம்
போதைப்பொருள் விவகாரம்- கன்னட நடிகை ராகினி வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீஸ் சோதனை
போதைப்பொருள் விவகாரம் தொடர்பாக கன்னட நடிகை ராகினியின் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று சோதனை மேற்கொண்டனர்.
பெங்களூரு:
கன்னட திரையுலகில் சில நடிகர், நடிகைகள் போதைப்பொருள் பயன்படுத்துவதாக திரைப்பட இயக்குனர் இந்திரஜித் லங்கேஷ் வெளியிட்ட தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து போதைப்பொருள் பயன்பாடு குறித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
போதைப் பொருள் பயன்பாடு குறித்த விசாரணைக்கு ஆஜராகும்படி, பிரபல நடிகை ராகினி திவேதிக்கு சம்மன் அனுப்பப்பட்டது. நேற்று பெங்களூரு சாம்ராஜ்பேட்டையில் உள்ள மத்திய குற்றப்பிரிவு தலைமை அலுவலகத்தில் அவர் ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், பெங்களூருவில் உள்ள நடிகை ராகினி திவேதியின் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் இன்று திடீரென சோதனை மேற்கொண்டனர். போதைப்பொருள் விவகாரத்தில் நடிகையின் நண்பரான ஆர்டிஓ அலுவலக இன்ஸ்பெக்டர் ரவி ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், இன்று சோதனை நடைபெற்றது.
ஜெயம் ரவி நடித்த நிமிர்ந்து நில், அறியான் ஆகிய தமிழ் திரைப்படங்களில் நடிகை ராகினி திவேதி நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story