என் மலர்
செய்திகள்

கல்வான் பள்ளத்தாக்கு
லடாக் மோதலில் 76 ராணுவ வீரர்கள் காயம்: ஒரு வாரத்தில் பணிக்கு திரும்புவார்கள் எனத் தகவல்
சீன ராணுவ வீரர்கள் தாக்குதலில் 20 வீரர்கள் உயிரிழந்துள்ள நிலையில், 76 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் ராணுவம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
லடாக் எல்லை கல்வான் பள்ளத்தாக்கில் இந்தியா - சீனா ராணுவ வீரர்கள் பயங்கரமாக மோதிக் கொண்டனர். இதில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். சீனா தரப்பில் 40-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு மற்றும் காயம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டது.
இன்று காலை ராணுவ வீரர்கள் யாரும் காணாமல் போகவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் 76 வீரர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக ராணுவம் தரப்பில் கூறப்பட்டள்ளது.
76 பேர்களில் 18 பேர் லே மருத்துவமனையிலும், மற்ற 58 பேர் மற்ற மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இவர்கள் யாரும் மோசமான நிலையில் இல்லை. ‘லே’ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்கள் 15 நாட்களுக்குள் பணிக்கு திரும்புவாரக்ள் என்றும், மற்றவர்கள் ஒரு வாரத்திற்குள் பணிக்கு திரும்புவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story






