என் மலர்
செய்திகள்

கர்நாடக உயர் நீதிமன்றம்
கர்நாடக மாநிலத்தில் ஜூன் 6ம் தேதி வரை நீதிமன்றங்கள் மூடல்
கர்நாடக மாநிலத்தில் ஜூன் 6ம் தேதி வரை நீதிமன்றங்கள் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு:
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் நீதிமன்றங்கள் மூடப்பட்டு, அவசர வழக்குகள் காணொலி மூலம் விசாரிக்கப்படுகின்றன. ஊரடங்கு நீட்டிக்கப்படுவதால் அதற்கேற்ப நீதிமன்றங்கள் மூடப்படும் தேதியும் நீட்டிக்கப்படுகிறது. இதுதொடர்பாக அந்தந்த மாநில உயர்நீதிமன்றம் அறிவித்து வருகிறது.
அவ்வகையில் கர்நாடக மாநிலத்தில் உள்ள உயர்நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றங்கள், குடும்பநல நீதிமன்றங்கள், தொழிலாளர் நல நீதிமன்றங்கள், தொழிற்தகராறு தீர்ப்பாயம் ஆகியவை ஜூன 6ம் தேதி வரை மூடியிருக்கும் என உயர்நீதிமன்ற பதிவாளர் அறிவித்துள்ளார்.
Next Story






