என் மலர்
செய்திகள்

கோப்பு படம்
முதியோர் பாதுகாப்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
முதியோர்களின் அத்தியாவசிய தேவைகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் முதியோர் பாதுகாப்பு சட்டத்தில் செய்யவுள்ள திருத்தம் தொடர்பான வரைவு மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்பதல் வழங்கியுள்ளது.
புதுடெல்லி:
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் முதியோர் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டுவருவது தொடர்பான வரைவு மசோதாவுக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த தகவலை மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
மூத்த குடிமக்களுக்கு மற்றும் வயதானோரின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்தல், அவர்களை கவனித்துக்கொள்ளுதல், பாதுகாப்பு ஆகியவற்றை உறுதி செய்யும் விதமாக ஏற்கனவே உள்ள சட்டத்தில் திருத்தம் கொண்டுவர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும், இந்திய குடியுரிமை சட்டத்திருத்தம் மசோதா, ரெயில்வே துறையில் ஜெர்மெனி நாட்டு கூட்டுறவு தொடர்பான மசோதா , தனிநபர் தகவல் பாதுகாப்பு மசோதாக்களுக்கு மத்திய மந்திரி சபை இன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.
அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ள வரைவு மசோதாக்கள் வரும் பாராளுமன்ற கூட்டத்தொடரில் விவாதத்துக்கு வரவுள்ளதாக பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
Next Story






