search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்பு படம்
    X
    கோப்பு படம்

    காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் மீது கல் ஏறிதல் சம்பவங்களை நடத்தியவர்களின் ஒருங்கிணைப்பாளர் கைது

    காஷ்மீரில் போராட்டம், பாதுகாப்பு படையினர் மீது கல் ஏறிதல் போன்ற தேச விரோத சம்பவங்களில் ஈடுபட்டவர்களை ஒருங்கிணைத்த நபரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.
    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கிய சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி ரத்து செய்து ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது. மேலும், அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க அங்கு ராணுவம் குவிக்கப்பட்டது.

    இதற்கிடையில், சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து ஜம்மு-காஷ்மீர் முழுவதும் அவ்வப்போது போராட்டங்கள் நடைபெற்றது. இந்த போராட்டங்களின் போது பாதுகாப்பு படையினர் மீது கல் எறி சம்பவங்களும் அரங்கேறியது. 

    குறிப்பாக ஸ்ரீநகரில் உள்ள அஞ்சார் சவ்ரா பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் போராட்டக்காரர்கள் பாதுக்காப்பு படையினரை குறிவைத்து கல் எறிதல், நாட்டிற்கு எதிராக முழங்களை எழுப்புதல், பொதுச்சொத்தை சேதப்படுத்துதல், பொதுமக்களுக்கு அச்சுருத்தலை ஏற்படுத்துதல் போன்ற தேச விரோத சம்பவங்களை அரங்கேற்றினர். 

    கைது செய்யப்பட்ட நபர்

    அந்த போராட்டக்காரர்களை குப்வாரா மாவட்டதின் தங்ஹ்டர் பகுதியை சேர்ந்த பஷிர் முகமது குரேஷி என்ற நபர் ஒருங்கிணைத்தார். இதையடுத்து, அவரை கைது செய்ய போலீசார் முயற்சி மேற்கொண்டனர். ஆனால் அவர் போலீசாரிடம் சிக்காமல் தலைமறைவாக வாழ்ந்துவந்தார்.  

    இந்நிலையில், ஸ்ரீநகரில் உள்ள சந்புரா பகுதியில் பதுங்கியுருந்த பஷிர் முகமது குரேஷியை போலீசாரால் நேற்று கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.  
    Next Story
    ×