என் மலர்tooltip icon

    செய்திகள்

    கஜேந்திரசிங் செகாவத்
    X
    கஜேந்திரசிங் செகாவத்

    நீர்நிலைகளை பாதுகாக்க ‘ஜல்சக்தி அபியான்’ திட்டம் தொடக்கம்

    நீர்நிலைகளை பாதுகாக்க ‘ஜல்சக்தி அபியான்’ திட்டத்தை டெல்லியில் மத்திய மந்திரி கஜேந்திரசிங் செகாவத் தொடங்கி வைத்தார்.
    புதுடெல்லி:

    நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் தண்ணீர் பிரச்சினை அதிகமாக உள்ளது.

    இந்த பிரச்சினையை சரி செய்யவும், இயற்கை வளத்தை பாதுகாக்கவும் மத்திய அரசு ‘ஜல்சக்தி அபியான்’ என்ற திட்டத்தை உருவாக்கி உள்ளது. நாடு முழுவதும் 255 மாவட்டங்களில் தண்ணீர் பற்றாக்குறை நிலவி வருவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதற்காக 255 கூடுதல் மற்றும் இணை செயலாளர்களை மத்திய அரசு நியமித்துள்ளது.

    இவர்கள் அந்தந்த மாவட்டங்களின் பொறுப்பாளர்களாக இருந்து தண்ணீர் சேமிப்பு திட்டங்களை செயல்படுத்த உள்ளனர். 255 மாவட்டங்களில் உள்ள 1592 தாலுகா வாரியாக நீர்நிலைகள் கண்காணிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.

    இந்த திட்டத்தை டெல்லியில் மத்திய மந்திரி கஜேந்திரசிங் செகாவத் நேற்று தொடங்கி வைத்தார். வறட்சி மாவட்டங்களுக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் தண்ணீர் சேகரிப்பு திட்டங்களை செயல்படுத்துவதுடன் விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர்.

    வருகிற செப்டம்பர் 13-ந் தேதி வரை ஒரு பகுதியாகவும், 1-ந்தேதி முதல் நவம்பர் 30-ந்தேதி வரை ஒரு பகுதியாகவும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    மத்திய-மாநில நீர் வளத்துறை இயக்குனர்கள், இணை இயக்குனர்கள், நீர்வள என்ஜினீயர்கள், அதிகாரிகள் பலரும் இந்த திட்டத்தின் கீழ் செயல்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளன. இவர்களுடன் அந்தந்த மாவட்டங்களில் உள்ள குழுக்கள் சேர்ந்து செயல்படும் என கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×