என் மலர்

    செய்திகள்

    நஸ்ரத் ஜஹான்
    X
    நஸ்ரத் ஜஹான்

    எனது ஆடையை பற்றி யாரும் கருத்து கூறக்கூடாது - நடிகை நஸ்ரத் ஜஹான்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    நான் எதை அணிய வேண்டும் என்று யாரும் கருத்து கூறக்கூடாது. மதநம்பிக்கை என்பது ஆடைக்கு அப்பாற்பட்டது என்று நடிகை நஸ்ரத் ஜஹான் எம்.பி. கூறி உள்ளார்.
    கொல்கத்தா:

    வங்காள நடிகை நஸ்ரத் ஜஹான் (வயது 29), பாராளுமன்ற தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்று எம்.பி. ஆகியுள்ளார். கடந்த மாதம் அவருக்கும், தொழிலதிபர் நிகில் ஜெயின் என்பவருக்கும் துருக்கியில் திருமணம் நடைபெற்றது. கடந்த 25-ந் தேதி, பதவி ஏற்பதற்காக நஸ்ரத் பாராளுமன்றத்துக்கு வந்தார். முஸ்லிம் பெண்ணான அவர், குங்குமம் வைத்திருந்ததுடன், தாலி அணிந்திருந்தார்.

    பாராளுமன்றம்

    மேலும், பதவி பிரமாண உறுதிமொழியை வாசித்து முடித்தவுடன், ‘வந்தே மாதரம்’ என்று கூறினார். அவரது செயலுக்கு எதிராக இஸ்லாமிய மத குருக்கள், ‘மதக்கட்டளை’ பிறப்பித்துள்ளனர். அவரது செயல் இஸ்லாமுக்கு விரோதமானது என்றும் ஜாமியா மதகுரு முப்தி ஆசாத் கசாமி தெரிவித்தார்.

    ஆனால், அதற்கு நஸ்ரத் பதிலடி கொடுத்துள்ளார். தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில், சாதி, இன, மத எல்லைகளை கடந்த இந்தியாவின் பிரதிநிதி நான். இப்போதும் முஸ்லிமாகவே இருக்கிறேன். ஆனால், நான் எதை அணிய வேண்டும் என்று யாரும் கருத்து கூறக்கூடாது. மதநம்பிக்கை என்பது ஆடைக்கு அப்பாற்பட்டது” என்று அவர் கூறியுள்ளார்.

    அவருக்கு பா.ஜனதா பெண் தலைவர்கள் உள்பட பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
    Next Story
    ×