search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    அமலாக்கத்துறை அதிரடி - அரியானா முன்னாள் முதல்வரின் ரூ.3.68 கோடி சொத்துகள் முடக்கம்
    X

    அமலாக்கத்துறை அதிரடி - அரியானா முன்னாள் முதல்வரின் ரூ.3.68 கோடி சொத்துகள் முடக்கம்

    வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் அரியானா முன்னாள் முதல் மந்திரி ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு சொந்தமான வீடு, நிலம் உள்ளிட்ட 3.68 கோடி ரூபாய் சொத்துகள் முடக்கப்பட்டன. #EDAttaches #OmPrakashChautala
    புதுடெல்லி:

    இந்திய லோக்தளம் கட்சியின் தலைவரான ஓம் பிரகாஷ் சவுதாலா முன்னர் அரியானா மாநில முதல் மந்திரியாக  பதவி வகித்தபோது லஞ்சம் வாங்கிக் கொண்டு ஆசிரியர்களை நியமித்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இது தொடர்பான வழக்கில் சவுதாலா, அவரது மகன் அஜய் சவுதாலா மற்றும் 3 பேருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து விசாரணை கோர்ட்டு கடந்த 2013-ம் ஆண்டு உத்தரவிட்டது. இந்த ஊழல் வழக்கில் அவர் டெல்லி திகார் ஜெயிலில் தண்டனை அனுபவித்து வருகிறார்.

    இந்நிலையில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் அவர் மீது பொருளாதார அமலாக்கத்துறையும் நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இவ்வழக்கில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஓம் பிரகாஷ் சவுதாலாவுக்கு சொந்தமான டெல்லி பஞ்சகுலா மற்றும் அரியானா மாநிலத்தில் உள்ள வீடு, நிலம் உள்ளிட்ட 3.68 கோடி ரூபாய் சொத்துகள் முடக்கப்பட்டதாக அமலாக்கத்துறை இன்று தெரிவித்துள்ளது. #EDAttaches #OmPrakashChautala
    Next Story
    ×