search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விண்ணில் செயற்கைக் கோளை சுட்டு வீழ்த்தி இந்தியா புதிய சாதனை - மோடி அறிவிப்பு
    X

    விண்ணில் செயற்கைக் கோளை சுட்டு வீழ்த்தி இந்தியா புதிய சாதனை - மோடி அறிவிப்பு

    விண்ணில் செயற்கைக் கோளை சுட்டு வீழ்த்தும் மிஷன் சக்தி சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக பிரதமர் மோடி அறிவித்தார். #Modi #MissionShakti
    புதுடெல்லி:

    பாராளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பிரதமர் மோடி நாட்டு இன்று தொலைக்காட்சி, வானொலி அல்லது சமூக ஊடகம் மூலமாக நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அவர் பேசியதாவது:-

    விண்வெளியில் அமெரிக்கா, ரஷியா, சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா பெரிய நாடாக உயர்ந்துள்ளது. விண்வெளித் துறையில் இந்தியா வியத்தகு சாதனையை இன்று நிகழ்த்தி உள்ளது. விண்ணில் செயற்கைக் கோள் ஒன்றை ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்தும் சோதனை வெற்றி அடைந்துள்ளது. மிஷன் சக்தி என்ற பெயரில், விண்ணில் செயற்கைக் கோளை தாக்கி அழிக்கும் சோதனை 3 நிமிடங்களில் வெற்றி அடைந்துள்ளது.



    நமது நாட்டின் செயற்கைக் கோளை அழிக்கும் முயற்சியை தடுக்கும் இந்த சோதனை வெற்றி அடைந்துள்ளது. முழுக்க முழுக்க இந்திய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது. இது இந்தியாவின் செயற்கைக் கோளை பாதுகாக்கும் முயற்சிதானே தவிர, பிற நாடுகளுக்கு எதிரான சோதனை அல்ல.

    செயற்கைக் கோள்களை துல்லியமாக தாக்கி அழிக்கும் சக்தியை இந்தியா பெற்றுவிட்டது. இது நாட்டின் பாதுகாப்பிற்கு பலம் சேர்க்கும். இந்த சோதனையை வெற்றிபெறச் செய்த விஞ்ஞானிகளுக்கு எனது வாழ்த்துக்கள்.

    இவ்வாறு அவர் பேசினார். #Modi #Mission Shakti

    Next Story
    ×