என் மலர்
செய்திகள்

விமானப்படை தாக்குதல்: இந்திய விமானப்படைக்கு தலைவணங்குகிறேன் - பிரதமர் மோடி
ராஜஸ்தானில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதமர் மோடி, பயங்கரவாத முகாம் மீது தாக்குதல் நடத்திய இந்திய விமானப்படைக்கு தலைவணங்குவதாக தெரிவித்தார். #PMModi #ChuruRally
சுரு:
ராஜஸ்தானின் சுரு பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
இந்தியாவிற்கு எதிரான எந்தவொரு செயலையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம். யாரிடமும் இந்தியா அடிபணியாது. எதற்காகவும் நாட்டை விட்டுக் கொடுக்க மாட்டேன்.

இந்தியா மிகவும் பாதுகாப்பான கரங்களில் உள்ளது. மேலும் அடுத்த 10 ஆண்டுகளில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் ரூ.7.5 லட்சம் கோடி சேர்க்கப்படும். இதற்காக விவசாயிகள் எதுவும் செய்ய தேவையில்லை. அவர்களது செல்போனிற்கு கணக்கில் பணம் ஏறிவிட்டதாக குறுஞ்செய்தி அனுப்பப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த பொதுக் கூட்டத்தில் பொதுமக்கள், முன்னாள் ராணுவ வீரர்கள் என பலர் கலந்துகொண்டனர். #PMModi #ChuruRally

இன்று காலை இந்திய விமானப்படையினர் நடத்திய தாக்குதலை எண்ணி பெருமிதம் கொள்கிறேன். விமானப்படைக்கு தலைவணங்குகிறேன்.

இன்று இந்தியாவின் அசாத்தியமான உள்ளங்களுக்கு மரியாதை செலுத்தும் நாள் ஆகும்.

Next Story