search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இஸ்ரோவின் ஜிசாட்-31 செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது
    X

    இஸ்ரோவின் ஜிசாட்-31 செயற்கைக்கோள் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது

    தகவல் தொடர்பு வசதிக்காக இஸ்ரோ உருவாக்கிய ஜிசாட் -31 செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு, நிலைநிறுத்தப்பட்டது. #GSAT31 #ISRO #FrenchGuiana
    புதுடெல்லி:

    நமது நாட்டில் தகவல் தொடர்பு வசதிகளைப் பெருக்கும் வகையில், அதிநவீன தகவல் தொடர்பு செயற்கைக்கோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் 40-வது தகவல் தொடர்பு செயற்கைக்கோளாக ‘ஜிசாட்-31’ என்ற செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான ‘இஸ்ரோ’ உருவாக்கி உள்ளது.

    இந்த செயற்கைக்கோள், இன்று அதிகாலை 2.33 மணியளவில் பிரெஞ்ச் கயானாவில் உள்ள கொரூவ்வில் இருந்து கனரக ஐரோப்பிய ராக்கெட்டான ‘ஏரியன்-5’ மூலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டு நிலைநிறுத்தப்பட்டது.
     


    ‘ஜிசாட்-31’ செயற்கைக்கோள் 2 ஆயிரத்து 535 கிலோ எடை கொண்டதாகும். இதன் ஆயுள் காலம் 15 ஆண்டுகள் ஆகும். இது ‘இஸ்ரோ’வின் ‘I 2கே பஸ்’ வகையின் மேம்படுத்தப்பட்ட செயற்கைக்கோள். இதன்மூலம் இந்தியாவின் மையப்பகுதியும், தீவுப்பகுதியும் பலன் அடையும். ‘ஜிசாட்-31’ செயற்கைக்கோள், விசாட் நெட்வொர்க், டெலிவிஷன் இணைப்பு, டிஜிட்டல் செயற்கைக்கோள் செய்தி சேகரிப்பு, டி.டி.எச். டெலிவிஷன் சேவை, செல்போன் சேவை ஆகியவற்றுக்கும் பயன்படும்.

    கடந்த இரண்டு மாதங்களில் கொரூவ்வில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்ட ‘இஸ்ரோ’வின் இரண்டாவது செயற்கைக்கோள் இதுவாகும். கடந்த டிசம்பர் மாதம் 5-ந் தேதி 5 ஆயிரத்து 854 கிலோ எடை கொண்ட ‘ஜிசாட்-11’ செயற்கைக்கோள், கொரூவ்வில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டது நினைவுகூரத்தக்கது. #GSAT31 #ISRO #FrenchGuiana
    Next Story
    ×