என் மலர்tooltip icon

    செய்திகள்

    பீகார் - சீமாஞ்சல் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து
    X

    பீகார் - சீமாஞ்சல் விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து

    பீகார் மாநிலத்தில் சீமாஞ்சல் விரைவு ரயிலின் 9 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது. #Bihar #TrainAccident #SeemanchalExpress
    பீகார் மாநிலம் வைஷாலி அருகே சீமாஞ்சல் விரைவு எக்ஸ்பிரஸ் ரயில் தடம்புரண்டு விபத்திற்குள்ளானது. இச்சம்பவத்தில் 6 பேர் வரை பலயாகி இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

    பீகாரின் வைஷாலி பகுதியில் வந்து கொண்டிருந்த சீமாஞ்சல் விரைவு ரெயிலின் 9 பெட்டிகள் இன்று அதிகாலை 3.52 மணியளவில் தடம் புரண்டு விபத்திற்குள்ளாகின.

    இந்த சம்பவத்தில் பெட்டிகளில் பயணம் செய்த பயணிகள் 6 பேர் பலியாகி இருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் இந்த ரயில் விபத்தில் பலர் காயம் அடைந்துள்ளனர். மேற்படி விபத்து குறித்து பிற விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.  மேற்படி விபத்து ஏற்பட்ட பகுதியில் மீட்பு பணிகள் விரைவில் நடைபெற்று வருவதாகவும் ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. 
    Next Story
    ×