என் மலர்
செய்திகள்

X
ஜிம் மாஸ்டரிடம் துப்பாக்கி முனையில் பணம் பறிப்பு- வீட்டுக்கு போய் சேர 20 ரூபாய் மட்டும் கொடுத்த கும்பல்
By
மாலை மலர்19 Jan 2019 12:05 PM IST (Updated: 19 Jan 2019 12:05 PM IST)

டெல்லியில் லிப்ட் கேட்டு காரில் சென்ற ஜிம் பயிற்சியாளரிடம் துப்பாக்கி முனையில் பணத்தை பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #YouthRobbed #DelhiGymInstructor
புதுடெல்லி:

ஆனால், அவர் இறங்க வேண்டிய இடம் வந்ததும், காரை நிறுத்தாமல் டிடியு கல்லூரி நோக்கி சென்றுள்ளனர். அங்கு காரை நிறுத்தி, துப்பாக்கியை காட்டி மிரட்டி, ஜிம் பயிற்சியாளரிடம் இருந்த பணம், செல்போன் மற்றும் பேக் ஆகியவற்றை பறித்துள்ளனர். பின்னர் அவரிடம் 20 ரூபாய் மட்டும் கொடுத்து, வீடு போய் சேரும்படி கூறிவிட்டு, அங்கிருந்து காரில் தப்பிச் சென்றுள்ளனர். வியாழக்கிழமை இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக ஜிம் பயிற்சியாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில், போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெண் உள்பட 4 பேரை தேடி வருகின்றனர். #YouthRobbed #DelhiGymInstructor
டெல்லியின் துவாரகா பகுதியில் இருந்து என்எஸ்ஐசி செல்வதற்காக, 24 வயது ஜிம் பயிற்சியாளர் ஒருவர் பேருந்திற்கு காத்திருந்தார். பேருந்து நீண்டநேரம் வராததால், அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி லிப்ட் கேட்டுள்ளார். காரில் இருந்தவர்கள், அவருக்கு லிப்ட் கொடுத்து ஏற்றிச் சென்றுள்ளனர்.

Next Story
×
X