என் மலர்
செய்திகள்

ரூ. 5 கோடி கள்ள நோட்டுடன் சத்தீஸ்கரில் தம்பதியர் கைது
சத்தீஸ்கரில் சுமார் 5 கோடி ரூபாய் மதிப்புடைய கள்ள நோட்டுக்களை அச்சடித்த தம்பதியரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். #CoupleheldforFakeCurrency
ராய்ப்பூர்:
சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் உள்ளது ராஜேந்திர நகர். அங்குள்ள வீட்டில் கள்ள நோட்டு அச்சடிக்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, உள்ளூர் போலீசார் அங்கு சென்று சோதனை நடத்தினர்.
அப்போது, ரஜத் பிரைம் காம்ப்ளக்ஸ் என்ற பிளாட்டில் வசித்து வந்த நிகில் குமார் சிங் (29), அவரது மனைவி பூனம் அகர்வால் (30), ஆகியோர் வீட்டை சோதனை செய்தனர்.
அங்கு சுமார் 5 கோடி ரூபாய் மதிப்பிலான 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர். மேலும் அங்கிருந்து ரூபாய் நோட்டுகளை அச்சடிக்கும் காகிதங்கள், கலர் பிரின்டர், லேப்டாப், 25 ஆயிரம் ரூபாய் ரொக்க பணம், 2 செல்போன்கள், கார் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
விசாரணையில், கள்ள நோட்டுகளை அச்சடித்த தம்பதி பீகாரை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. இதைத் தொடர்ந்து அந்த தம்பதியை போலீசார் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர். #CoupleheldforFakeCurrency
Next Story






