என் மலர்
செய்திகள்

பாகிஸ்தான் உளவாளிக்கு இந்திய ரகசியங்களை அளித்த எல்லை பாதுகாப்பு படை வீரர் கைது
இந்திய எல்லையோரப் பகுதிகள் தொடர்பான முக்கிய ரகசியங்களை பாகிஸ்தான் நாட்டு உளவாளிக்கு அளித்த இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரர் கைது செய்யப்பட்டார். #BSFjawanarrested #sharinginfo #Pakistaniagent
சண்டிகர்:
மகாராஷ்டிரா மாநிலம், லத்தூர் மாவட்டத்தில் உள்ள ரேன்புரா கிராமத்தை சேர்ந்தவர் ஷேக் ரியாசுதீன்.
இந்திய எல்லை பாதுகாப்பு படை வீரராக பணியாற்றும் இவரது நடத்தையில் சில மாதங்களாக ஏற்பட்ட மாறுதல்களை கவனித்த எல்லை பாதுகாப்பு உளவுப்படை அதிகாரிகள் ரியாசுதீனை தீவிரமாக கண்காணித்து வந்தனர்.
தற்போது பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பெரோஸ்பூர் பகுதியில் உள்ள எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றிவரும் ரியாசுதீன் இந்திய எல்லைக்கோட்டுப் பகுதியில் இருக்கும் வேலிகள் மற்றும் இணைப்பு சாலைகளை தனது கைபேசியில் படம் பிடித்து அவற்றை பாகிஸ்தானை சேர்ந்த ஒரு உளவாளி மிர்ஸா பைஸல் என்பவருக்கு ரகசியமாக அனுப்பி வந்துள்ளார்.

மேலும், இந்திய எல்லை பாதுகாப்பு படை உயரதிகாரிகள் சிலரது கைபேசி எண்களையும் அவர் தெரிவித்துள்ளார். இதை மோப்பம் பிடித்த உளவுப்படை அதிகாரிகள் உரிய ஆதாரங்களை சேகரித்த பின்னர் ரியாசுதீனை கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து இரண்டு கைபேசிகள் மற்றும் 7 சிம்கார்டுகளை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். #BSFjawanarrested #sharinginfo #Pakistaniagent
Next Story






