search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வங்கி கடனுக்காக பாலியல் சகாயம் கேட்ட மேனஜரை மொத்தி எடுத்த வீரமறத்தி
    X

    வங்கி கடனுக்காக பாலியல் சகாயம் கேட்ட மேனஜரை மொத்தி எடுத்த வீரமறத்தி

    கர்நாடக மாநிலத்தில் வங்கி கடனுக்காக பாலியல் ரீதியாக ஒத்துழைக்குமாறு வற்புறுத்திய மேனஜரை ஒரு பெண் வழிமறித்து தடியாலும், செருப்பாலும் தாக்கும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. #DavanagereWoman #bankmanager
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம், தவனகரே மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெண் அங்குள்ள ஒரு வங்கியில் கடனுக்காக விண்ணப்பித்துள்ளார். கடன் அளிப்பதற்கு பரிகாரமாக அந்த பெண்ணை வங்கியின் மேனஜர் படுக்கைக்கு அழைத்துள்ளார்.

    இதனால், மனம் வெறுத்துப்போன அந்தப்பெண் வேதனையுடன் வங்கியில் இருந்து வெளியேறினார். ஆனால், நல்ல குடும்பத்தை சேர்ந்த தன்னை இழிவுப்படுத்திய மேனஜருக்கு தகுந்த பாடம் கற்பிக்க விரும்பிய அந்தப் பெண் நேற்று இருசக்கர வாகனத்தில் சென்ற வங்கி மேனஜரை கைகாட்டி வழிமறித்தார்.



    ‘பழம் நழுவி பாலில் விழுந்தது’ என்று ஆசையுடன் மேனேஜர் அவரை நெருங்கினார். சற்றும் தாமதிக்காமல் மேனேஜரின் சட்டையை பிடித்து இழுத்த அந்தப் பெண், கன்னட மொழியில் திட்டியவாறு பெரிய தடிக்கம்பால் அவரை சரமாரியாக தாக்கியதுடன், செருப்பாலும் அடித்தார்.

    இந்த காட்சி நேற்றிலிருந்து சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இவரைப்போல் தவறை உடனடியாக தட்டிக்கேட்பதுடன், அயோக்கியர்களை தோலுரித்துக் காட்டி தண்டிக்கும் துணிச்சல் அனைத்து பெண்களுக்கும் வர வேண்டும் என இந்த வீடியோவை பார்த்தவர்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். #DavanagereWoman #bankmanager #bankmanagersexualfavours #sexualfavourstoapproveloan

    Next Story
    ×