search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆசியாவில் சீனா மற்றும் ஜப்பான் தவிர அனைத்து நாடுகளின் நாணய மதிப்புகள் கடும் வீழ்ச்சி
    X

    ஆசியாவில் சீனா மற்றும் ஜப்பான் தவிர அனைத்து நாடுகளின் நாணய மதிப்புகள் கடும் வீழ்ச்சி

    டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் உள்பட ஆசியா நாடுகளின் அனைத்து நாணயங்களின் மதிப்பும் வரலாற்றில் இல்லாத அளவுக்கு கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. #RupeeRecordLow #IndianRupeeValue
    புதுடெல்லி :

    கடந்த 3 மாதங்களாகவே இந்திய ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகிறது. இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து கடும் வீழ்ச்சி கண்டுள்ள நிலையில், எண்ணெய் மற்றும் காஸ் சிலிண்டர்களின் விலை உயர்ந்து வருகிறது. இதனால் நாட்டு மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

    கடந்த மாதம் ரூபாய் மதிப்பு மிக மோசமான சரிவைச் சந்தித்தது. ஒவ்வொரு நாளும், முந்தைய நாளை முந்திக் கொண்டு மீண்டும் மீண்டும் வரலாற்றில் இல்லாத அளவு சரிவடைந்தது.

    இந்நிலையில் இந்திய ரூபாய் மதிப்பு இன்று மீண்டும் மிகப்பெரிய சரிவை சந்தித்தது. இன்று காலை நேர வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 73.77 ரூபாயாக சரிந்தது.

    தென்கொரிய வோன்  0.84%, இந்தோனேசியா ரூபியா 0.54%, தைவான் டாலர் 0.37%, சீனா ஆஃப்ஷோர் 0.21%, மலேசிய ரிங்கட் 0.21%, பிலிப்பைன்ஸ் பெஸோ 0.17%, சிங்கப்பூர் டாலர் 0.08%.  சரிவடைந்து உள்ளன.

    எனினும் சீனாவின் ரென்மின்பி 0.31%, ஜப்பான் யென் 0.18%  ஆகியவை மட்டும் சரிவை சந்திக்காமல் உயர்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. #RupeeRecordLow #IndianRupeeValue
    Next Story
    ×