என் மலர்
செய்திகள்

பாக். எல்லை வழியாக ஊடுருவ முயன்ற இரு பயங்கரவாதிகள் இன்று கொல்லப்பட்டனர்
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைகோட்டுப் பகுதி வழியாக இன்று இந்தியாவுக்கு ஊடுருவ முயன்ற இரு பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் இன்று சுட்டுக் கொன்றனர். #infiltrationbid #Twoterroristskilled
ஸ்ரீநகர்:
ஜம்மு-காஷ்மீர் மாநிலம், குப்வாரா மாவட்டத்தில் உள்ள தாங்டர் எல்லைகோட்டுப் பகுதியில் இந்திய ராணுவம் மற்றும் எல்லை பாதுகாப்பு படையினர் இன்று வழக்கம்போல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இங்குள்ள வனப்பகுதி வழியாக பாகிஸ்தானில் இருந்து சிலர் இந்திய பகுதிக்குள் ஊடுருவ முயன்றனர். இதை கவனித்துவிட்ட இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் அவர்களை திரும்பிப் போகும்படி எச்சரித்தனர்.
அந்த எச்சரிக்கையை பொருட்படுத்தாத பாகிஸ்தான் பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிகளால் சுட்டபடி முன்னேறி வந்தனர். பாதுகாப்பு படை வீரர்களும் எதிர்தாக்குதல் நடத்தினர். இதில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இன்றிரவு 8 மணி நிலவரப்படி, தொடர்ந்து அப்பகுதியில் துப்பாக்கிச் சண்டை நீடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. #infiltrationbid #Twoterroristskilled
Next Story






