என் மலர்

  செய்திகள்

  பிரதமர் இம்ரான்கானை பாக். ராணுவம் இயக்குகிறது - மத்திய மந்திரி வி.கே.சிங்
  X

  பிரதமர் இம்ரான்கானை பாக். ராணுவம் இயக்குகிறது - மத்திய மந்திரி வி.கே.சிங்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரதமர் இம்ரான்கானை பாகிஸ்தான் ராணுவம் இயக்குகிறது என்று மத்திய மந்திரி வி.கே.சிங் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #Pakistan #ImranKhan

  புதுடெல்லி:

  இந்தியாவுக்கு தொல்லை கொடுப்பதையே தங்களது புனித கடமையாக கருதி பாகிஸ்தான் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.

  பாகிஸ்தானில் சமீபத்தில் நடந்த பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் கட்சி வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது.

  அவர் ஆட்சிக்கு வந்ததால் இந்திய உறவு விவகாரத்தில் சில மாற்றங்கள் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. அதை உறுதிப்படுத்தும் வகையில் பாகிஸ்தான் பிரதமராக பதவி ஏற்றதுமே இம்ரான்கான் சில கருத்துக்களை வெளியிட்டார்.

  அண்டை நாடுகளுடன் நல்லுறவை மேம்படுத்தவே நாங்கள் விரும்புகிறோம். இந்த பகுதியில் பதட்டம் நீடிப்பதை விரும்பவில்லை என்று கூறினார்.

  இதை தொடர்ந்து பிரதமர் மோடி இம்ரான்கானுக்கு அனுப்பிய கடிதத்தில் அர்த்தமுள்ள ஆக்கப்பூர்வ மான வி‌ஷயங்கள் தொடர்பாக ஒத்துழைக்க தயார். இது சம்பந்தமாக பேசுவதற்கும் தயார் என்று கூறி இருந்தார்.

  இந்த நிலையில் பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் வந்த பிறகும் எந்த மாற்றமும் தென்படவில்லை என்று இந்திய வெளியுறவுத்துறை இணை மந்திரியும், முன்னாள் இந்திய ராணுவ தளபதியுமான வி.கே.சிங். கூறி இருக்கிறார்.


   

  டெல்லியில் பாதுகாப்பு தொடர்பாக நடந்த கூட்டத்தில் பங்கேற்ற வி.கே. சிங் பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் இந்த கருத்தை வெளியிட்டார்.

  இம்ரான்கான் பிரதமராக இருப்பதால் இந்திய வி‌ஷயங்கள் தொடர்பாக ஏதேனும் புதிய சூழ்நிலைகளை உருவாக்குவாரா? என்பது எனக்கு தெரியவிலலை.

  ஆனால், அவர் ஆட்சிக்கு வந்த பிறகும் இந்திய உறவு வி‌ஷயத்தில் எந்த மாற்றமும் தென்படவில்லை. அவர் பாகிஸ்தான் ராணுவம் ஆட்டுவிக்கும் ஒருவராகவே செயல்படுகிறார்.

  அவர் என்ன செய்யப் போகிறார்? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். உகந்த சூழ்நிலைகள் வந்தால் மட்டும் தான் பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும்.

  பாகிஸ்தானை பொறுத்த வரை இன்னும் ராணுவம் தான் ஆட்சி செய்கிறது. அதற்கு கட்டுப்படும் நபராக பிரதமர் இருக்கிறார். அப்படி இருக்கும்போது, பெரிய மாற்றங்கள் வந்து விடும் என்று நாங்கள் எதிர் பார்க்கவில்லை.

  ராணுவத்தின் கட்டுப்பாட்டில் பிரதமர் இருக்கிறாரா? பிரதமரின் கட்டுப்பாட்டில் ராணுவம் இருக்கிறதா? என்பதை பொறுத்தே மற்ற வி‌ஷ யங்கள் அமையும்.

  இவ்வாறு வி.கே.சிங். கூறினார்.

  மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் காஷ்மீரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். அவர் நிருபர்களிடம் கூறும் போது, பாகிஸ்தானில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போதிலும் வேறு எந்த மாற்றங்களும் நிகழ்ந்ததாக தெரியவில்லை. அவர்களுடைய இயற்கை குணம் மாறாது.

  அண்டை நாடுகளுடன் மோதல் போக்கை நீடிப்பதே அவர்களது குணமாக உள்ளது. அதை மாற்ற முடியாது என்று கூறினார். #Pakistan #ImranKhan

  Next Story
  ×