search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்தில் பல மாற்றங்கள் செய்தது தேசிய நெடுஞ்சாலை ஆணையம்
    X

    சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்தில் பல மாற்றங்கள் செய்தது தேசிய நெடுஞ்சாலை ஆணையம்

    சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்தில் பல மாற்றங்கள் செய்துள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையம், புதிய அறிக்கையை சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளது. #ChennaiSalemExpressway #NHAI
    டெல்லி:

    சென்னை - சேலம் 8 வழிச்சாலை திட்டத்துக்கு அப்பகுதி மக்களிடையே கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. எதிர்ப்புக்கு மத்தியில் சாலை அமைக்கும் பணியில் அரசு ஈடுபட்டு வருகிறது. இந்த திட்டத்துக்கு எதிராக பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

    இந்நிலையில், 8 வழிச்சாலை திட்டதில் பல மாற்றங்களை செய்துள்ள தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அந்த அறிக்கையை சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் சமர்ப்பித்துள்ளது. அதில், கூறப்பட்டுள்ளதாவது:-

    சேலத்தில் உள்ள கல்வராயன் மலை பாதிக்காதவாறு செங்கம் - சேலம் சாலை வழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வனப்பகுதியில் 13.2 கி.மீ.க்கு பதில் 9 கி.மீ. தூரம் மட்டுமே சாலை அமைக்கப்படும்.

    300 ஏக்கருக்கு பதில் 103 ஏக்கர் வனப்பகுதி மட்டும் கையகப்படுத்தப்படும். வனப்பகுதியில் 70 மீட்டருக்கு பதில் 50 மீட்டர் அகலத்தில் சாலை அமைக்கப்படும். திட்ட மதிப்பீடு ₹ 10 ஆயிரம் கோடியில் இருந்து ₹7210 கோடியாக குறைப்பு. முதல் கட்டமாக 6 வழிச்சாலை மட்டுமே போடப்பட உள்ளது. பின்னர், தேவைக்கு ஏற்றது போல 8 வழிச்சாலையாக மாற்றப்படும்.

    ஆகிய மாற்றங்கள் புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    Next Story
    ×