என் மலர்

  செய்திகள்

  பெட்ரோல்-டீசல் விலை ஏற்றம் குறித்து அரசு பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை - நிதி ஆயோக் துணை தலைவர்
  X

  பெட்ரோல்-டீசல் விலை ஏற்றம் குறித்து அரசு பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை - நிதி ஆயோக் துணை தலைவர்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தினந்தோறும் புதிய உச்சத்தை தொடும் பெட்ரோல்-டீசல் விலை ஏற்றம் குறித்து அரசு பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை என நிதி ஆயோக் அமைப்பின் துணை தலைவர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார். #NITIAayog #RajivKumar
  புதுடெல்லி:

  பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு தினந்தோறும் புதிய உச்சத்தை தொடும் வகையில் இதன் விலைகள் அமைகின்றன.


  பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது பொதுமக்களையும், வாகன ஓட்டிகளையும் அவதியுற வைத்து உள்ளது. அத்தியாவசிய பொருட்கள், காய்கறிகள் ஆகியவற்றின் விலையும் உயரும் நிலை ஏற்பட்டு இருக்கிறது. அதுமட்டுமின்றி ஓட்டல் சாப்பாடு, உணவு பண்டங்களின் விலையும் உயர்கிற நிலை ஏற்பட்டு உள்ளது.

  இப்போதே ஆட்டோ, ஷேர் ஆட்டோ கட்டணம் ஆங்காங்கே உயர்த்தப்பட்டு உள்ளது. கால்டாக்சி கட்டணமும் உயர்கிறது. இது சாமானிய மக்களுக்கு மிகுந்த வேதனையை அளித்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்ந்து வருவது குறித்து முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் கருத்து தெரிவித்து உள்ளார்.

  இதுபற்றி அவர் கூறுகையில் ’பெட்ரோல், டீசல் விலை இடைவிடாது உயர்ந்து வருகிறது. இது தவிர்க்க முடியாதது அல்ல. பெட்ரோல், டீசல் மீதான அதிகப்படியான வரி விதிப்பு, விலை நிர்ணயித்தலில் முக்கிய பங்கு வகிக்கிறது. வரிகளைக் குறைத்தால், விலைகள் குறையும்’ என குறிப்பிட்டார்.

  ஆனால் பெட்ரோல், டீசல் மீதான உற்பத்தி வரியை குறைப்பதற்கு வாய்ப்பு இல்லை என்று மத்திய அரசு கை விரித்து விட்டது.

  இந்நிலையில், பெட்ரோல்-டீசல் விலை ஏற்றம் குறித்து அரசு பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை என நிதி ஆயோக் அமைப்பின் துணைத் தலைவர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.

  இதுகுறித்து அவர் ஊடகங்களிடம் கூறுகையில், ’குறிப்பிட்ட காலங்களில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மாறும், கடந்த ஜூன் மாதத்தில் அதிகரித்த கச்சா எண்ணெய் விலை, ஜூலை மாதத்தில் சரிவை கண்டது. எனவே சர்வதேச சந்தையை பொருத்து அத்தியாவசிய பொருட்களின் விலை மாறும். எனவே விலை குறையும் சூழ்நிலை விரைவில் வரலாம்.

  அதனால், இதற்கெல்லாம் அரசு பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை. சர்வதேச சந்தைகளில் ஏற்படும் மாற்றங்களுக்காக மத்திய அரசின் கொள்கைகளை மாற்றிக்கொள்ள முடியாது’ என அவர் தெரிவித்தார். #NITIAayog #RajivKumar
  Next Story
  ×