என் மலர்
செய்திகள்

பத்திரிகையாளர்களுக்கு மத்தியப்பிரதேசம் அரசு சலுகை மழை
பத்திரிகையாளர்கள் மரணம் அடைந்தால் ரூ.4 லட்சம், வாகனம், கேமரா சேதமடைந்தால் ரூ.50 ஆயிரம் என ஏராளமான சலுகைகளை மத்தியப்பிரதேசம் மாநில அரசு இன்று அறிவித்துள்ளது. #MPcabinet #deceasedjournalists #exgratiahike
போபால்:
மக்கள் தொடர்புத்துறை மந்திரி நரோட்டம் மிஷ்ரா இன்று போபால் நகரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட பத்திரிகையாளர்கள் மரணம் அடைந்தால் தற்போது அரசின் சார்பில் அவர்களின் குடும்பத்துக்கு அளிக்கப்படும் நிவாரணத்தொகையை ஒரு லட்சம் ரூபாயில் இருந்து நான்கு லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதாக அவர் அறிவித்தார்.
பத்திரிகையாளர்களின் வாகனங்கள், கேமராக்கள் சேதம் அடைந்தால் தற்போது அளிக்கப்படும் இழப்பீட்டு தொகை ரூ.25 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரமாக உயர்த்தப்படும். அதிகபட்சமாக 25 லட்சம் ரூபாய் வரை வீட்டுக்கடன் பெறும் பத்திரிகையாளர்களுக்கு வட்டித்தொகையில் 5 சதவீதத்தை தொடர்ந்து ஐந்தாண்டுகளுக்கு மாநில அரசு ஏற்றுகொள்ளும்.
நேற்று நடைபெற்ற மந்திரிசபை கூட்டத்தில் மேற்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.#MPcabinet #deceasedjournalists #exgratiahike

Next Story