search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கேரள பேரழிவு பற்றி நீதி விசாரணை நடத்த வேண்டும் - எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா பேட்டி
    X

    கேரள பேரழிவு பற்றி நீதி விசாரணை நடத்த வேண்டும் - எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா பேட்டி

    கேரள மக்களுக்கு எந்தவிட முன்னறிவிப்பு இன்றி நள்ளிரவில் அணைகள் திறக்கப்பட்டது பற்றி நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா கூறியுள்ளார். #KeralaFloods
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் வரலாறு காணாத மழை வெள்ளத்தால் அந்த மாநிலமே பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. பெருமழை காரணமாக மாநிலத்தில் உள்ள பெரிய அணைகளான இடுக்கி, பாணாசுரசாகர், செறுதோணி, மலம்புழா உள்பட அனைத்து அணைகளுக்கும் அதிக அளவு நீர் வரத்து இருந்ததால் பாதுகாப்பு கருதி 44 அணைகள் திறந்து விடப்பட்டன. இதனால் பல மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கும் சூழ்நிலை உருவானது.

    வெள்ளம், நிலச்சரிவுகளில் சிக்கி 370 பேர் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் தங்கள் வீடு, உடமைகளை இழந்து முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். இயற்கையின் சீற்றம் காரணமாக இந்த பேரிழப்பு கேரளாவுக்கு ஏற்பட்டு உள்ளது.

    அதேசமயம் மாநில அரசும் இந்த பேரழிவுக்கு காரணம் என்று கேரள எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னிதலா மற்றும் பாரதிய ஜனதா கட்சி தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை ஆகியோர் குற்றம்சாட்டி உள்ளனர்.


    கேரளாவில் நிகழ்ந்திருக்கும் வரலாறு காணாத பேரழிவுக்கு இயற்கை மட்டும் காரணம் அல்ல. 300-க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்து இருப்பதற்கு இயற்கையை மட்டும் குறை கூறமுடியாது. முழுக்க, முழுக்க மனிதர்களே இந்த பாதிப்புக்கு காரணம்.

    கேரளாவில் மழை காரணமாக 44 அணைகள் நிரம்பியதால் அந்த அணைகளை மாநில அரசு ஒரே நேரத்தில் திறந்துவிட்டது. அணைகளை திறக்கும்போது அந்த பகுதியில் வசிக்கும் மக்களுக்கு தகுந்த முன்னெச்சரிக்கையை விடுத்திருக்க வேண்டும். ஆனால் எந்தவித முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் கேரள அரசு மேற்கொள்ளவில்லை. நள்ளிரவில் கேரள மக்கள் தூங்கிக்கொண்டிருந் தபோது அணைகளை எல்லாம் அரசு திறந்துவிட்டுள்ளது. எனவே இது பற்றி நீதி விசாரணை நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கேரள மாநில பாரதிய ஜனதா தலைவர் ஸ்ரீதரன் பிள்ளையும் கேரளாவில் ஏற்பட்டுள்ள பேரழிவுக்கு மாநில அரசை குறை கூறி உள்ளார். மாநில அரசின் அலட்சிய போக்கால் இந்த பாதிப்பு ஏற்பட்டு மக்கள் தவிப்புக்கு உள்ளானதாக அவர் குற்றம்சாட்டி உள்ளார்.  #KeralaFloods
    Next Story
    ×