search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மும்பையில் ரூ.3.51 கோடிக்கு ஏலம்போன தாவூத்திற்கு சொந்தமான 4 மாடி கட்டிடம்
    X

    மும்பையில் ரூ.3.51 கோடிக்கு ஏலம்போன தாவூத்திற்கு சொந்தமான 4 மாடி கட்டிடம்

    நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமிற்கு சொந்தமாக மும்பையில் உள்ள 4 மாடி கட்டிடம் ரூ.3.51 கோடிக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. #dawoodibrahim
    மும்பை:

    மும்பை குண்டுவெடிப்பு சதிகாரன் தாவூத் இப்ராகிம் இந்தியாவில் இருந்து தப்பி பாகிஸ்தானில் தலைமறைவாக இருக்கிறான். அவனுக்கு 28 ஆண்டுகளாக பாகிஸ்தான் அரசாங்கம் அடைக்கலம் கொடுத்து இருக்கிறது.

    தாவூத் இப்ராகிம்மை இந்தியா கொண்டுவர மத்திய அரசு பல நடவடிக்கைகளை எடுத்தும் பாகிஸ்தான் அரசு தங்களிடம் தாவுத் இப்ராகிம் இல்லை என மறுத்துள்ளது.

    இதற்கிடையே மும்பையில் உள்ள தாவூத் இப்ராகிமின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. தாவூத்தின் முடக்கப்பட்ட சொத்துக்களை விரைவில் ஏலம்விட உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி தாவூத் இப்ராகிம் சொத்துக்கள் ஏலம் விடப்பட்டு வருகிறது.  

    இந்நிலையில், தெற்கு மும்பையில் உள்ள பேந்தி பஜார் பகுதியில் அமைந்துள்ள தாவுத்திற்கு சொந்தமான 4 மாடி கட்டிடத்தை மத்திய நிதி அமைச்சகம், கடத்தல்காரர்கள் மற்றும் அந்நிய செலாவனி மோசடியாளர்கள் சட்டத்தின் கீழ் நேற்று ஏலத்தில் விட்டது.

    ஆரம்ப விலையாக ரூ.79 லட்சம் நிர்ணயிக்கப்பட்ட இதனை ஏலத்தில் வாங்குவதற்காக சையிப் புர்ஹானி மேம்பாட்டு அறக்கட்டளை மற்றும் டெல்லியை சேர்ந்த வழக்கறிஞர் புபேந்திர பரத்வாஜ் ஆகிய இரண்டு தரப்பு பங்கேற்றது, இறுதியில் சையிப் புர்ஹானி மேம்பாட்டு அறக்கட்டளை மசுல்லா என பெயரிடப்பட்ட 4 அடுக்கு கட்டிடத்தை ரூ.3.51 கோடிக்கு ஏலத்தில் வாங்கியுள்ளது. #dawoodibrahim
    Next Story
    ×