search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காருக்கு பதில் உழவு மாடுகள்- வயலில் கிகி நடனம் ஆடி சவால்விட்ட இளைஞர்கள்
    X

    காருக்கு பதில் உழவு மாடுகள்- வயலில் கிகி நடனம் ஆடி சவால்விட்ட இளைஞர்கள்

    தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 2 இளைஞர்கள் ‘கிகி’ நடனம் ஆடுகிறார்கள். ஆனால் அவர்கள் காருக்கு பதில் உழவு மாடுகளை பயன்படுத்தி இருக்கிறார்கள். #kikichallenge #KiKiDance
    ஐதராபாத்:

    சமூக வலைதளத்தில் தற்போது ‘கிகி’ நடனம் சவால் பிரபலமாகி வருகிறது. ஓடும் காரில் இருந்து இறங்கி நடனமாட வேண்டும்.

    இந்த சவாலை ஏற்று ஹாலிவுட் பிரபலங்கள் மற்றும் இந்திய நடிகர்- நடிகைகள், இளைஞர்கள் பலர் என ஓடும் காரில் இருந்து இறங்கி நடனமாடும் வீடியோக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் கிகி நடனம் சவால் கிராமத்திலும் பிரபலமாகி இருக்கிறது. தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 2 இளைஞர்கள் ‘கிகி’ நடனம் ஆடுகிறார்கள். ஆனால் அவர்கள் காருக்கு பதில் உழவு மாடுகளை பயன்படுத்தி இருக்கிறார்கள்.

    வயலில் உழவு மாடுகளை கட்டி உழ ஆரம்பிக்கிறார்கள். திடீரென்று இருவரும் மாட்டின் கயிறை விட்டுவிட்டு நடனம் ஆடுகிறார்கள். மாடுகள் தனியாக நடந்து செல்ல இவர்கள் இருவரும் துள்ளி குதித்து நடனமாடும் வீடியோ இணைய தளத்தில் வைரலாக பரவி வருகிறது.


    காருக்கு பதில் உழவு மாடுகளை பயன்படுத்தியதால் கிகி நடனத்தை கிண்டல் அடித்திருப்பதாக பலர் கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் ஓடும் காரில் இருந்து திடீரென இறங்குவது ஆபத்தாக முடியும் என்று எச்சரித்துள்ளனர்.

    இதனால் இருவரும் பாதுகாப்பான ‘கிகி’ நடனத்திற்காக உழவு மாடுகளை பயன்படுத்தி இருப்பார்கள் என்று ஒரு தரப்பினர் தெரிவித்துள்ளனர். எப்படி இருந்தாலும் ‘கிகி’ நடனம் வெளிநாடு முதல் கிராம பகுதி வரை பிரபலமாகி இருக்கிறது. #kikichallenge #KiKiDance


    Next Story
    ×