search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பஞ்சாப், அரியானாவிலும் பார்மாலின் மீன்கள் விற்பனை - ஆய்வில் கண்டுபிடிப்பு
    X

    பஞ்சாப், அரியானாவிலும் பார்மாலின் மீன்கள் விற்பனை - ஆய்வில் கண்டுபிடிப்பு

    அரியானா, பஞ்சாப், சண்டிகார் ஆகிய மாநிலங்களிலும் பார்மாலின் கலக்கப்பட்ட மீன்கள் விற்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. #Chemicalfish #Chemicallacedfish

    சண்டிகார்:

    இறந்தவர்களின் உடல்கள் கெட்டுப்போகாமல் இருக்க பார்மாலின் என்ற ரசாயனத்தை கலந்து பாடம் செய்யப்படுகிறது.

    இந்த ரசாயனம் வி‌ஷத் தன்மை கொண்டதாகும். உணவு பொருட்களில் இவற்றை தொடர்ந்து பயன் படுத்தினால் புற்று நோய் ஏற்படும். உடல் உறுப்புகள் கடுமையாக பாதிக்கப்படும்.

    ஆனால், இந்த ரசாயனத்தை மீன்கள் கெட்டுப் போகாமல் இருக்க பயன் படுத்துவதாக தெரிய வந்தது.

    தமிழ்நாட்டில் பல இடங்களில் இதுபோன்ற மீன்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. வெளிமாநிலங்களில் இருந்து விற்பனைக்காக வர வழைக்கப்பட்ட மீன்களில் இந்த ரசாயனங்கள் கலக்கப்பட்டு இருந்தன.

    ஆந்திராவில் இருந்து அசாம் மாநிலத்துக்கு அனுப்பப்பட்ட மீன்களிலும் இதேபோன்று ரசாயனம் கலப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் ஆந்திரா மீன்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

    இந்த நிலையில் அரியானா, பஞ்சாப், சண்டிகார் ஆகிய மாநிலங்களிலும் பார்மாலின் கலக்கப்பட்ட மீன்கள் விற்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    சமூக அமைப்பு ஒன்று மீன்களை மாதிரிக்கு எடுத்து சென்று ஆய்வு செய்தது. அதில் 10 வகையான மீன்களில் பார்மாலின் கலக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

    பஞ்சாப், அரியானா, சண்டிகார் மாநிலங்களில் கடல் இல்லை. அங்கு பெரும் பாலும் ஆற்று மீன்கள் பயன் படுத்தப்படுகின்றன.

    இது தவிர, குஜராத், ஒடிசா, மராட்டியம், ஆந்திரா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் இருந்து கடல் மீன்கள் வரவழைக்கப்பட்டு இந்த மாநிலங்களில் விற்கப் படுகின்றன.

    வெளி மாநிலங்களில் இருந்து கிழக்கு டெல்லியில் உள்ள காசிப்பூர் மார்க் கெட்டுக்கு மொத்தமாக கடல் மீன்கள் வருகின்றன. பின்னர் அவை அருகில் உள்ள பஞ்சாப், சண்டிகார், அரியானா மாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றன.

    இந்த மீன்களில்தான் கலப்படம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநில அதிகாரிகள் அறிவித்துள்ளனர். #Chemicalfish #Chemicallacedfis

    Next Story
    ×