என் மலர்

  செய்திகள்

  திருப்பதியில் இந்த ஆண்டு 2 பிரம்மோற்சவம் - 7 லட்சம் லட்டுகள் இருப்பு
  X

  திருப்பதியில் இந்த ஆண்டு 2 பிரம்மோற்சவம் - 7 லட்சம் லட்டுகள் இருப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு இரண்டு பிரம்மோற்சவம் நடப்பதால் பக்தர்களுக்காக 7 லட்சம் லட்டுகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. #TirupatiTemple
  திருமலை:

  திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இந்த ஆண்டு இரண்டு பிரம்மோற்சவம் நடக்கிறது. முதல் பிரம்மோற்சவம் செப்டம்பர் மாதம் 13-ந் தேதியில் இருந்து 21-ந் தேதி வரையும், 2-வது பிரம்மோற்சவம் (நவராத்திரி) அக்டோபர் மாதம் 10-ந்தேதி முதல் 18-ந்தேதி வரையும் நடக்கிறது.

  முதல் பிரம்மோற்சவம் செப்டம்பர் 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 17-ந் தேதி கருடவாகனம், 18-ந் தேதி தங்கத்தேர், 20-ந்தேதி மரத்தேர், 21-ந் தேதி சக்கரஸ்நானம் ஆகியவையும், 2-வது பிரம்மோற்சவத்தின்போது அக்டோபர் 14-ந் தேதி கருடவாகனம், 17-ந் தேதி தங்கத்தேர், 18-ந் தேதி சக்கரஸ்நானம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.

  தினமும் காலை 8 மணி முதல் 10 மணி வரையும், இரவு 8 மணி முதல் 10 மணி வரையும் வாகன சேவைகள் நடக்கிறது. வழக்கமாக இரவு 7 மணி முதல் 12 மணி வரை நடக்கும் கருடசேவை 8 மணி முதல் 1 மணி வரை நடைபெறுகிறது. 13-ந் தேதி ஆந்திரா மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு அரசு சார்பில் பட்டு வஸ்திரம் வழங்குகிறார்.  பிரம்மோற்சவ விழா ஏற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு தேவஸ்தான அதிகாரி அனில்குமார்சிங்கால் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

  பிரம்மோற்சவ விழாவுக்காக ரூ.4½ கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் (ஆகஸ்டு) 30-ந் தேதிக்குள் சிறப்பு ஏற்பாடு பணிகளை முடிக்கவேண்டும். பக்தர்களுக்காக 7 லட்சம் லட்டுகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. கருடசேவை அன்று திருமலைக்கு இரு சக்கர வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்படுகிறது. 6,800 கார்கள் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்படுகிறது. 165 சிறப்பு பஸ்கள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

  கருடசேவையின்போது வி.ஐ.பி.தரிசனம் ரத்து செய்யப்படுகிறது. 10 மாநிலங்களை சேர்ந்த கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

  இவ்வாறு அவர் கூறினார்.

  கூட்டத்தில் தேவஸ்தான துணை அதிகாரிகள் பாலபாஸ்கர், சீனிவாசராஜி, பாதுகாப்பு அதிகாரி சிவகுமார் ரெட்டி, என்ஜினீயர் சந்திரசேகர் ரெட்டி, கோவில் அதிகாரி அரிந்திரநாத், சித்தூர் மாவட்ட கலெக்டர் பிரதியும்ணா, போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக்மகந்தி பங்கேற்றனர். #TirupatiTemple

  Next Story
  ×