என் மலர்

  செய்திகள்

  குரு பூர்ணிமா: சீரடி சாய்பாபா அறக்கட்டளைக்கு ரூ.6.40 கோடி நிதி குவிந்தது
  X

  குரு பூர்ணிமா: சீரடி சாய்பாபா அறக்கட்டளைக்கு ரூ.6.40 கோடி நிதி குவிந்தது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குரு பூர்ணிமாவையொட்டி மராட்டிய மாநிலம், சீரடியில் உள்ள சாய்பாபா அறக்கட்டளைக்கு 6 கோடியே 50 லட்சம் ரூபாய் நன்கொடை குவிந்ததாக தெரிய வந்துள்ளது.
  மும்பை:

  மராட்டிய மாநிலம், சீரடியில் உள்ள சாய்பாபா ஆலயத்தில் கடந்த 27-ம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடைபெற்ற குரு பூர்ணிமா பூஜையின்போது உண்டியல் வருமானம், பல்வேறு கவுன்ட்டர்களில் ரசீது விற்பனை பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய தங்க நகைகள், வெள்ளிப் பொருட்கள் மற்றும் வெளிநாட்டு நாணயங்கள் மூலமாக சுமார் 6 கோடியே 40 லட்சத்து 95 ஆயிரத்து 305 ரூபாய் கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

  கடந்த 2016-ம் ஆண்டி நிலவரப்படி, சீரடி சாய்பாபா அறக்கட்டளையின் பெயரில் தேசியமயமாக்கப்பட்ட பல்வேறு வங்கிகளில் 1650 கோடி ரூபாய் நிரந்தர வைப்பு நிதியாக வைக்கப்பட்டுள்ளது, மேலும் 350 கிலோ தங்கம் மற்றும் 4 ஆயிரம் கிலோ வெள்ளி ஆகியவை ஆலய கருவூலத்தில் வைக்கப்பட்டுள்ளதாக நிர்வாகிகள் முன்னர் குறிப்பிட்டிருந்தனர். #ShirdGuruPurnima #ShirdiSaitemple
  Next Story
  ×