search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஒடிசாவில் கனமழை நீடிப்பு- தண்டவாளம் மூழ்கியதால் நடுவழியில் நிறுத்தப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்
    X

    ஒடிசாவில் கனமழை நீடிப்பு- தண்டவாளம் மூழ்கியதால் நடுவழியில் நிறுத்தப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்

    ஒடிசா மாநிலத்தில் கனமழை காரணமாக தண்டவாளம் தண்ணீரில் மூழ்கியதையடுத்து, அந்த வழியாக வந்த விரைவு ரெயில் நிறுத்தப்பட்டது. #OdishaRain #ExpressTrainStuck
    புவனேஸ்வர்:

    ஒடிசா மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பரவலாக மழை பெய்து வருவதால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்துள்ளது. ஏராளமான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. இந்நிலையில் நேற்று முதல் இடைவிடாமல் கனமழை பெய்ததால் கட்டாக், புவனேஸ்வர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிப்பதால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது.

    கனமழையால் பேரழிவு ஏற்பட்டதையடுத்து, கட்டாக் மற்றும் புவனேஸ்வரில் இன்று பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.


    இந்நிலையில், ராயகடா மாவட்டத்தில் கனமழையால் பல்வேறு பகுதிகளில் தண்டவாளம் தெரியாத அளவிற்கு தண்ணீர் சூழ்ந்துள்ளது. புவனேஸ்வர்-ஜகதல்பூர் ஹிராகந்த் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்துகொண்டிருந்தபோது திடீரென தண்டவாளத்தில் மழைநீர் சூழ்ந்தது. தொடர்ந்து ரெயிலை இயக்க முடியாததால், ரெயில் நிலையம் அருகே நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் பரிதவித்தனர். #OdishaRain #ExpressTrainStuck
    Next Story
    ×