என் மலர்
செய்திகள்

ஓய்வு பெற்ற கடற்படை தளபதிக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை
இந்திய கடற்படை தொடர்பான ரகசிய ஆவணங்களை விற்க முயன்ற வழக்கில் ஓய்வு பெற்ற கடற்படை தளபதிக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி :
கடற்படையின் ஓய்வு பெற்ற தளபதி சலாம் சிங் ரத்தோர் வீட்டில் இருந்து இந்திய கடற்படையின் பாதுகாப்பு தொடர்பான 7 ஆயிரம் பக்கங்கள் கொண்ட ரகசிய ஆவணங்கள் கடந்த 2005-ம் ஆண்டு கைப்பற்றப்படது.
இவற்றை பணத்திற்காக மற்றவர்களுக்கு விற்பனை செய்ய முயன்ற குற்றத்திற்காக ஓய்வு பெற்ற தளபதி சலாம் சிங் ரத்தோர் மற்றும் ஒய்வு பெற்ற கம்மேன்டர் ஜர்னைல் சிங் கல்ரா ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பான விசாரணை டெல்லி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில், சலாம் சிங் ரத்தோரருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதித்து சி.பி.ஐ சிறப்பு நீதிபதி எஸ்.கே.அகர்வால் இன்று தீர்ப்பளித்தார். மேலும், இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட கம்மேன்டர் ஜர்னைல் சிங் கல்ரா விடுதலை செய்யப்பட்டார்.

Next Story