search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பினராய் விஜயன்- உயர் போலீஸ் அதிகாரிகளை தவறாக சித்தரிக்கப்பட்ட படம்
    X
    பினராய் விஜயன்- உயர் போலீஸ் அதிகாரிகளை தவறாக சித்தரிக்கப்பட்ட படம்

    கேரள முதல்-மந்திரியை சமூக வலைதளங்களில் தவறாக சித்தரித்து பரப்பிய 3 வாலிபர்கள் கைது

    கேரள முதல் மந்திரி பினராய் விஜயனை சமூக வலைதளங்களில் தவறாக சித்தரித்து பரப்பியது தொடர்பாக 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். #pinarayiVijayan
    கொழிஞ்சாம்பாறை:

    கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் பினராய் என்ற ஊரை சேர்ந்தவர் கேரள முதல்-மந்திரி பினராய் விஜயன். இவர் இதே பகுதியில் நேற்று ஒரு போலீஸ் நிலையத்தை திறந்து வைக்க வந்தார்.

    விழா முடிந்ததும் அங்குள்ள ஒரு பதிவேட்டில் கையெழுத்திட்டார். அப்போது டி.ஜி.பி. தேபேஸ்குமார் பெகரா மற்றும் உயர் போலீசார் உடன் இருந்தனர். சிறிது நேரத்தில் கேரள முதல்-மந்திரி வேறு நிகழ்ச்சிக்கு சென்று விட்டார்.

    அவர் சென்ற சிறிது நேரத்தில் பினராய் விஜயன் ஒரு போலீஸ் நிலையத்தில் சாப்பிடுவதுபோலவும், அதனை உயர் போலீஸ் அதிகாரிகள் உன்னிப்பாக பார்ப்பதுபோலவும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

    இது உயர் போலீஸ் அதிகாரி மற்றும் முதல்-மந்திரிக்கு தெரியவந்ததும் இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு பினராய் விஜயன் உத்தரவிட்டார். போலீசாரும் முதல்-மந்திரிக்கு மட்டுமல்ல தங்களுக்கும் ஏற்பட்ட அவமானம் என்று உடனடியாக களத்தில் இறங்கினர்.

    சைபர் செல் உதவியுடன் உயர் போலீஸ் அதிகாரிகள் சமூக வலைதளங்களில் முதல்-மந்திரி மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளை தவறாக சித்தரித்த நபர்களை தேடி வந்தனர்.

    இந்நிலையில் முகமது, மணீஷ், சசித்குமார் ஆகியோரை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் கூறும்போது எங்களுக்கு வந்த பதிவை நாங்கள் பரவ விட்டோம். இந்த படத்தை யார் மார்பிங் செய்தார்கள் என்று தங்களுக்கு தெரியாது என்று கூறினர். இதனையடுத்து முதல்-மந்திரியை தவறாக சித்தரித்து படம் தயாரித்த முக்கிய நபரை போலீசார் தேடி வருகிறார்கள். #pinarayiVijayan
    Next Story
    ×