என் மலர்

  செய்திகள்

  இந்தியாவின் முதல் பார்வையற்ற பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி - துணை கலெக்டராக பொறுப்பேற்பு
  X

  இந்தியாவின் முதல் பார்வையற்ற பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி - துணை கலெக்டராக பொறுப்பேற்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  இந்தியாவின் முதல் பார்வையற்ற பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியான மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பிரன்ஞால் பாடில் கேரளாவில் துணை கலெக்டராக பொறுப்பேற்றுள்ளார். #PranjalPatil
  புதுடெல்லி:

  மகாராஷ்டிரா மாநிலம் உஹான்ஸ்நகரைச் சேர்ந்தவர் பிரன்ஞால் பாடில். சிறு வயதில் கண்பார்வையை இழந்த இவர் தனது தன்னம்பிக்கையை கைவிட வில்லை. பெற்றோரின் உதவியுடன் தனது பட்டப்படிப்பை முடித்தார். 2014 ம் ஆண்டு சிவில் சர்விஸ் தேர்வு எழுதினார். அதில் 773-வது ரேங்க் எடுத்து தேர்ச்சி பெற்றார். இருப்பினும் அவரால் கலெக்டராக முடியவில்லை. இதையடுத்து 2016-ம் ஆண்டு நடைபெற்ற தேர்வில் வெற்றி பெற்று ஐ.ஏ.எஸ். அதிகாரியானார்.  பின்னர் லால் பகதூர் சாஸ்த்ரி தேசிய அகாடமியில் பயிற்சி பெற்று வந்தார். இந்நிலையில், கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்திற்கு துணை கலெக்டராக பொறுப்பேற்றுள்ளார். இரண்டு கண் பார்வையையும் இழந்த பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக பொறுப்பேற்ற சம்பவம் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

  இவர் இந்தியாவின் முதல் பெண் பார்வையற்ற பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. விடாமுயற்சியால் உயரத்தை தொட்ட இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. #PranjalPatil
  Next Story
  ×