search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மோடியை கிண்டல் செய்ய போடப்பட்ட பக்கோடா கடையில் ஓஹோவென போகும் வியாபாரம்
    X

    மோடியை கிண்டல் செய்ய போடப்பட்ட பக்கோடா கடையில் ஓஹோவென போகும் வியாபாரம்

    பிரதமர் மோடியின் பேச்சை கிண்டல் செய்ய காங்கிரஸ் பிரமுகர் ஒருவர் போட்ட பக்கோடா கடையிலிருத்து தற்போது 35 கிளைகளுக்கு பக்கோடா சப்ளை செய்யப்படுகிறது.
    அகமதாபாத்:

    சில மாதங்களுக்கு முன்னர் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பிரதமர் மோடி, “நிறைய பக்கோடா கடைகள் தொடங்கப்பட்டுள்ளன”என வேலைவாய்ப்பு குறித்து பேச, “பக்கோடா விற்பது வேலைவாய்ப்பு என்றால், பிச்சை எடுப்பதும் வேலைவாய்ப்புதான்”என முன்னாள் நிதிமந்திரி ப.சிதம்பரம் அதற்கு பதிலடி கொடுத்தார்.

    பக்கோடா விவகாரம் சூடுபிடித்ததை அடுத்து, “சும்மா இருப்பதற்கு பக்கோடா வியாபாரம் செய்வது மேல்” என பாராளுமன்றத்தில் அமித்ஷா பேசினார். “பொறியியல் படித்தது பக்கோடா விற்கவா?” என எதிக்குரல் எழுந்தது. மேலும், பெங்களூரில் மோடி கலந்து கொண்ட பொதுக்கூட்டம் அருகே, இளைஞர்கள் ‘மோடி பக்கோடா.. அமித்ஷா பக்கோடா’ என கூவிக்கூவி விற்றனர்.

    அதே சமயத்தில், குஜராத் மாநிலம் வதோதராவில் காங்கிரஸ் பிரமுகர் நாராயண்பாய் ராஜ்புத், மோடியின் பேச்சை கிண்டலடிக்கும் விதமாக பக்கோடா கடை ஒன்று போட்டார். முதல் நாளில் 200 ரூபாய் வருவாய் கிடைத்த நிலையில், நாளுக்கு நாள் இது அதிகரித்தது.

    ஆஹா! நல்ல பிஸினஸ் கிடைத்து விட்டது என்று உணர்ந்த நாராயண்பாய் ராஜ்புத் பக்கோடா தொழிலில் முழு வீச்சாக இறங்கியதன் பலனாக, தற்போது அவரது கடையில் தினமும் 600 கிலோ பக்கோடா விற்பனையாகிறது. மேலும், அந்நகரத்தில் உள்ள 35 கிளைகளுக்கு இங்கிருந்து பக்கோடா சப்ளை செய்யப்படுகிறது.
    Next Story
    ×