என் மலர்
செய்திகள்

உடல்நிலை குணமடைந்தது - கோவில்களுக்கு சென்று வழிபட்டு பணியைத் தொடங்கிய கோவா முதல்வர்
அமெரிக்காவில் சிகிச்சை முடிந்து திரும்பிய கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர், இன்று கோவில்களுக்கு சென்று வழிபட்டு அதன்பின்னர் அரசுப் பணிகளைத் தொடங்கினார்.
பனாஜி:

இந்நிலையில், மனோகர் பாரிக்கர் இன்று வடக்கு கோவாவில் கண்டோலா கிராமத்தில் உள்ள தேவகி கிருஷ்ணர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அவருடன் அவரது குடும்பத்தினரும் சென்றிருந்தனர்.
பின்னர் அங்கிருந்து தலைநகர் பனாஜி திரும்பிய அவர், மகாலட்சுமி கோவிலுக்குச் சென்று வழிபட்டார். அதன்பின்னர் தனது அலுவலகத்திற்குச் சென்று பணிகளைத் தொடங்கினார்.
உயர் அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் ஆகியோரை இன்று தனது அலுவலகத்திற்கு அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். மாநில சட்டம் ஒழுங்கு விவகாரம் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. #ManoharParrikar
கோவா முதல் மந்திரி மனோகர் பாரிக்கர் கணையத்தில் புற்றுநோய் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார். கடந்த இரண்டரை மாதங்களுக்கு மேலாக அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை நிறைவுற்று உடல்நிலை குணமடைந்ததை அடுத்து, மனோகர் பாரிக்கர் நேற்று நாடு திரும்பினார். அமெரிக்காவில் இருந்து விமானம் மூலம் மும்பை வந்த மனோகர் பாரிக்கர், மும்பையில் இருந்து கோவா வந்து சேர்ந்தார்.

Next Story