என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ‘தனுஷ்’ பீரங்கி இறுதிக்கட்ட சோதனை வெற்றி
Byமாலை மலர்8 Jun 2018 10:39 PM GMT (Updated: 8 Jun 2018 10:39 PM GMT)
முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ‘தனுஷ்’ பீரங்கியை இறுதிக்கட்டமாக பரிசோதித்து பார்த்ததில் வெற்றிகரமாக அமைந்தது.
புதுடெல்லி:
முதல் முறையாக முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ‘தனுஷ்’ பீரங்கி, நீண்ட தொலைவில் உள்ள இலக்கை குறிபார்த்து சுடவல்லது. மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூரில் உள்ள துப்பாக்கி தொழிற்சாலையில் இது தயாரிக்கப்பட்டது.
155 எம்எம் ரகத்தை சேர்ந்த இந்த பீரங்கி, 38 கி.மீ. தூரத்தில் உள்ள இலக்கையும் தாக்கி அழிக்கும். இது, போபர்ஸ் பீரங்கி தாக்கும் தூரத்தை விட 11 கி.மீ. அதிகம் ஆகும். ‘உள்நாட்டு போபர்ஸ்’ என்றும் ‘தனுஷ்’ அழைக்கப்படுகிறது.
குளிர் பிரதேசமான சிக்கிம், லே, வெயில் பிரதேசமான ஒடிசா மாநிலத்தின் பலசோர் ஆகிய இடங்களில் வெற்றிகரமாக பரிசோதித்து பார்க்கப்பட்ட தனுஷ் பீரங்கி, பாலைவன பிரதேசமான பொக்ரானில் இறுதியாக பரிசோதித்து பார்க்கப்பட்டது. இதுவும் வெற்றிகரமாக அமைந்ததையடுத்து, தனுஷ் பீரங்கியை இந்திய ராணுவத்தில் சேர்க்க வழி பிறந்துள்ளது. நடப்பு நிதி ஆண்டில், 12 தனுஷ் பீரங்கிகள், ராணுவத்தில் சேர்க்கப்பட உள்ளன.

Next Story
×