என் மலர்
செய்திகள்

எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான குற்ற வழக்குகள் - சிறப்பு நீதிமன்றங்களுக்கு மத்திய அரசு 1.79 கோடி ஒதுக்கீடு
எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றங்களுக்கு மத்திய அரசு 1.79 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. #SpecialCourts
புது டெல்லி :
கடந்த வருடம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அனைத்து மாநில சட்ட மன்ற உறுப்பினர்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்க 12 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் மத்திய அரசை அறிவுறுத்தியது.
இதன் அடிப்படையில் அரசியல்வாதிகளின் மீது நிலுவையில் உள்ள வழக்குகளை விசாரிக்க நாடு முழுவதும் 11 மாநிலங்களில் 12 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நீதிமன்றங்களை நடத்த வருடத்துக்கு 8 கோடி ரூபாய் அரசுக்கு செலவாகும்.
அதில் முதற்கட்டமாக 1 கோடியே 79 லட்சம் ரூபாய் நிதியை இன்று மத்திய அரசு விடுவித்துள்ளது. இந்த நிதியை பயன்படுத்தியதறகான சான்றிதழை சட்ட அமைச்சகத்திற்கு வழங்கிய பின்னரே அடுத்த கட்ட நிதி வழங்கப்படும் என மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பீகார், கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரப்பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் இந்த சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. டெல்லியில் மட்டும் இரண்டு சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. #SpecialCourts
Next Story






