என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இந்திராணி முகர்ஜி டிஸ்சார்ஜ்
Byமாலை மலர்2 Jun 2018 9:11 PM GMT (Updated: 2 Jun 2018 9:11 PM GMT)
உடல்நலம் சரியில்லாததால் மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஷீனா போரா கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான இந்திராணி முகர்ஜி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். #IndraniMukerjea #SheenaBoraMurder
மும்பை:
பிரபல தனியார் தொலைக்காட்சியில் தலைமை பொறுப்பை வகித்த பீட்டர் முகர்ஜியின் மனைவியான இந்திராணி (43), தனது மகள் ஷீனா போராவை கொலை செய்ததாக கடந்த ஆண்டில் கைது செய்யப்பட்டார். இந்திராணி முகர்ஜி மற்றும் சித்தார்த்தா தாசுக்கு பிறந்ததாக கூறப்படும் ஷீனா போராவை அவரது தாயார் இந்திராணி முகர்ஜி, நிதி பிரச்சனை காரணமாக கொலை செய்துள்ளார் என்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, இந்திராணி முகர்ஜி கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். அவருடன் சேர்த்து அவரது இரண்டாவது கணவர் என்று கூறப்படும் சஞ்சீவ் கண்ணா, கார் ஓட்டுனர் ஷியாம்வர் ராய் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மும்பை பைகுல்லா சிறையில் இந்திராணி முகர்ஜி அடைக்கப்பட்டிருந்தார்.
இதற்கிடையே, ஷீனா போரா கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான இந்திராணி முகர்ஜியின் உடல் நலம் நேற்று முன்தினம் இரவு பாதிக்கப்பட்டதால் மும்பையில் உள்ள ஜே.ஜே.மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்ததையடுத்து மருத்துவமனையில் இருந்து நேற்றிரவு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். இதையடுத்து மீண்டும் அவர் மும்பை பைகுல்லா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். #IndraniMukerjea #SheenaBoraMurder
Next Story
×