search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திராணி முகர்ஜி மருத்துவமனையில் அனுமதி
    X

    கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திராணி முகர்ஜி மருத்துவமனையில் அனுமதி

    ஷீனா போரா கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திராணி முகர்ஜி, உடல்நலம் சரியில்லாத காரணத்தால் மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். #IndraniMukerjea #SheenaBoraMurder

    மும்பை:

    பிரபல தனியார் தொலைக்காட்சியில் தலைமை பொறுப்பை வகித்த பீட்டர் முகர்ஜியின் மனைவியான இந்திராணி (43), தனது மகள் ஷீனா போராவை கொலை செய்ததாக கடந்த ஆண்டில் கைது செய்யப்பட்டார். இந்திராணி முகர்ஜி மற்றும் சித்தார்த்தா தாசுக்கு பிறந்ததாக கூறப்படும் ஷீனா போராவை அவரது தாயார் இந்திராணி முகர்ஜி, நிதி பிரச்சனை காரணமாக கொலை செய்துள்ளார் என்று அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக, இந்திராணி முகர்ஜி கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டார். அவருடன் சேர்த்து அவரது இரண்டாவது கணவர் என்று கூறப்படும் சஞ்சீவ் கண்ணா, கார் ஓட்டுனர் ஷியாம்வர் ராய் உள்ளிட்டோரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். தற்போது மும்பை பைகுல்லா சிறையில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.


    கொலை செய்யப்பட்ட ஷீனா போரா

    இதற்கிடையே, ஷீனா போரா கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான இந்திராணி முகர்ஜி உடல் நலம் பாதிக்கப்பட்டதால்  மும்பையில் உள்ள ஜே.ஜே. மருத்துவமனையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    ஏற்கனவே அதிகளவு சக்தி கொண்ட வலி நிவாரண மருந்துகளை அவர் உட்கொண்டதன் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டதால் கடந்த ஏப்ரல் மாதம் அவர் இதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. #IndraniMukerjea #SheenaBoraMurder
    Next Story
    ×