search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    உ.பி.யில்  மண் சரிந்து விழுந்து 2 சிறுமிகள் பரிதாப பலி
    X

    உ.பி.யில் மண் சரிந்து விழுந்து 2 சிறுமிகள் பரிதாப பலி

    உத்தரப்பிரதேசம் மாநிலம் பெரெய்லி மாவட்டத்தில் மண் மேடு சரிந்து விழுந்ததில் 2 சிறுமிகள் மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #earthcollapsed
    லக்னோ:

    உத்தரப்பிரதேசம் மாநிலம் பெரெய்லி மாவட்டத்தில் உள்ள ரதன்கார் கிராமத்தைச் சேர்ந்த சீமா தேவி (17) மற்றும் ஜோதி (8) ஆகிய இரு சிறுமிகள் மண் மேட்டிலிருந்து மண்ணை தோண்டிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென மண் சரிந்து சிறுமிகள் மீது சரிந்தது.

    இதில் இருவரும் சிக்கி கொண்டனர். அதனைக்கண்ட கிராமத்தினர் இருவரையும் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவர்களை சோதனை செய்த மருத்துவர்கள், சிறுமிகள் மூச்சுத்திணறி இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. #earthcollapsed

    Next Story
    ×