search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கர்நாடக சட்டமன்றம் கூடியது - புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு
    X

    நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கர்நாடக சட்டமன்றம் கூடியது - புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு

    கர்நாடக மாநிலத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பிற்காக சிறப்பு சட்டமன்ற கூட்டம் தொடங்கியதும், புதிய எம்.எல்.ஏ.க்களுக்கு தற்காலிக சபாநாயகர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். #KarnatakaCMRace #KarnatakaFloorTest
    பெங்களூரு:

    கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத சூழ்நிலையில், அதிக தொதிகளில் வெற்றி பெற்ற கட்சி என்ற அடிப்படையில் பா.ஜ.க.வை ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்தார். எடியூரப்பா முதல்வராக பதவியேற்றார்.  அவர் 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி கவர்னர் உத்தரவிட்டார். ஆனால் எடியூரப்பா பதவியேற்புக்கு எதிரான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மே 19-ம் தேதி மாலை 4 மணிக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது.

    இதையடுத்து சிறப்பு சட்டமன்றக் கூட்டத்தை கூட்டும்படி ஆளுநர் வஜூபாய் வாலா உத்தரவிட்டார். அதன்படி தற்காலிக சபாநாயர் போபையா தலைமையில் இன்று காலை 11 மணிக்கு சட்டசபை கூடியது.

    சபை கூடியதும், எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களுக்கு தற்காலிக சபாநாயகர் போபையா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.



    பா.ஜ.க.வின் குதிரை பேரத்தை தடுப்பதற்காக காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்கள் ஐதராபாத்தில் உள்ள சொசுகு விடுதிகளில் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் நேற்று இரவு அங்கிருந்து புறப்பட்டு பெங்களூர் வந்து சேர்ந்தனர். இன்று சட்டசபைக்கு வரும் வரை அவர்கள் சிதறிவிடாமல் ஒருங்கிணைத்து கொண்டு வரும் பணியில் கட்சி தலைவர்கள் தீவிரமாக பணியாற்றினர். #KarnatakaCMRace #KarnatakaFloorTest

    Next Story
    ×