என் மலர்

  செய்திகள்

  ஓட்டு போடாதவர்களின் கை கால்களை கட்டி, தூக்கி வந்து பாஜகவுக்கு வாக்களிக்க வையுங்கள் - எடியூரப்பா அதிரடி
  X

  ஓட்டு போடாதவர்களின் கை கால்களை கட்டி, தூக்கி வந்து பாஜகவுக்கு வாக்களிக்க வையுங்கள் - எடியூரப்பா அதிரடி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஓட்டு போடாதவர்களின் கை கால்களை கட்டி, தூக்கி வந்து பா.ஜ.க வேட்பாளருக்கு வாக்களிக்க வையுங்கள் என அக்கட்சி தொண்டர்களை எடியூரப்பா வலியுறுத்தியுள்ளார்.#karnatakaelection2018 #Yeddyurappa
  பெங்களூர்:

  கர்நாடகாவில்  வருகிற 12-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வெற்றி பெற காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க மிகத் தீவிரமாக தங்கள் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். பிரதமர் மோடி, கர்நாடகா முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு காங்கிரசுக்கு எதிராக பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.

  இந்நிலையில், பெலகாவியில் இன்று நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் பேசிய, பா.ஜ.க.வின் முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா, முதல்வர் சித்தராமையா போட்டியிடும் பதாமி, சாமுண்டேஸ்வரி ஆகிய 2 தொகுதிகளிலும் தோற்பார் என்றும், காங்கிரஸ் மூழ்கி கொண்டிருக்கிறது, எனவே அனைவரும் பா.ஜ.க.வுக்கு வாக்களியுங்கள் என்றும் தெரிவித்தார்.

  மேலும், யாரெல்லாம் ஓட்டு போடாமல் இருக்கிறார்களோ அவர்கள் வீட்டுக்குப் போய், அவர்களின் கை, கால்களை கட்டி தூக்கி வந்து,  கிட்டூர் தொகுதி பாஜக வேட்பாளர் மகன்தேஷ் டொட்டாகவுடருக்கு வாக்களிக்க வையுங்கள் என்றும் அதிரடியாக பேசியுள்ளார். #karnatakaelection2018 #Yeddyurappa
  Next Story
  ×